இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளீர்களா? அப்போ இதை கவனியுங்கள்! கடைசி தேதி அறிவிப்பு!
தற்போது பல வங்கிகள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. மத்திய அரசின் பரிந்துரைப்படி, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல வங்கிகளும் ஒரே வங்கியில் சேர்க்கப்படுகின்றன. தற்போது ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா என்ற இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக அந்த வங்கிகளின் காசோலைகள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. அதுவும் பழைய காசோலைகள் அக்டோபர் 1ஆம் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும் அறிவிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. எனவே அந்த வங்கிகளின் காசோலையை மாற்றிக்கொள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளை பொதுமக்கள் நாடலாம் என்றும் அந்த வங்கி கடைசி தேதியும் அறிவித்திருந்தது. ஓபிசி வங்கிக்கு 636022002 என்றும், யுபிஐ வங்கிக்கு 636027002 என்றும் ஐ.எப்.எஸ்.சி கோட் இருக்கும். ஆனால் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 636024002 என்றும் இருப்பதன் காரணமாகவும், புதுபிக்கப்பட்ட எம்.ஐ.சி.ஆர் மற்றும் ஐ.எப்.எஸ்.சி பிஎன்பி காசோலை புத்தகங்களை வாங்கிக் கொள்ள அறிவுறுத்துகிறது.
மேலும் அந்த வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் ஓபிசி மற்றும் யுபிஐ வங்கிகளின் காசோலைகள் அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு செல்லாமல் போகும் பட்சத்தில் அதை பயன்படுத்தக் கூடாது என கண்டிப்பாக கூறி உள்ளது. தற்போது வரை வாடிக்கையாளர்கள் அதையே பின்பற்றி வருவதன் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பழைய காசோலை புத்தகத்தை புதுப்பிக்க வாடிக்கையாளர்கள் பிஎன்பியின் வங்கி கிளைக்கு சென்றோ அல்லது அழைப்பு மையத்திற்கு தொடர்பு கொண்டோ அவர்களது காசோலை புத்தகங்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. எனவே தவறாதீர்கள் சென்று மாற்றிக் கொள்ளுங்கள் மக்களே. இதை தவற விட்டால் அதற்கு தனியாக தண்டம் கட்ட சொன்னாலும் சொல்லுவார்கள். உஷாராக நாம் முன்னமே மாற்றிக் கொள்ளலாம்.