Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதில் சீழ் வடிதல் வீக்கம் உள்ளதா? சரி செய்யும் அற்புதமான மருந்து!!!

காதில் சீழ் வடிதல் வீக்கம் உள்ளதா? சரி செய்யும் அற்புதமான மருந்து!!!

காதில் நமக்கு எவ்வாறு நோய் ஏற்படுகிறது என்றால் நாம் குளிக்கும் போது காதில் உள்ளே நீர் செல்கிறது. இந்த நீரை நாம் கவனிக்காமல் விட்டால் அது நாள் பட்டதாகி காதினூள் இருக்கும் குரும்பை சுற்றி இன்பெக்ஷனை ஏற்படுத்தும். நாம் காதினுள் ஏதேனும் வைத்து குடையும் பொழுது நம்முடைய ஏர் டிரம் பாதித்து இதனால் காதில் வலி உண்டாகிறது.

 

அடுத்து நம் பஸ்ஸில் இல்லை அல்லது ரயில் பயணங்களில் செல்லும் பொழுது அதிகமாக காற்று வீசும் அந்த காற்று நமது காதுக்குள் புகுந்து காதிலிருக்கும் காக்ளியா என்ற உறுப்பினை சற்றி பாதிப்பு ஏற்படுகிறது. இது நாம் நடக்கும் பொழுது உடல் சமநிலையை மேம்படுத்துகிறது. மேலும் நாம் ரசாயனம் கலந்த ஹேர் டை நாம் தடவும் பொழுது அந்த ஹேர் டை காதினுள் சென்று பாதிப்பை ஏற்படுத்தி காது வலியை உண்டாக்குகிறது.

 

அடுத்து அளவுக்கு மீறிய சவுண்ட் அதாவது ஒலி கேட்கும் பொழுது ஏர் டிரம் பாதிக்கப்பட்டு காது வலியை உண்டாக்கலாம். அதிகமான ஒலியை கேட்கும் பொழுது ஏர் டிரம் பாதிக்கப்பட்டு அதிகமான அதிர்வெண்களால் காதில் வலி உண்டாகும். பாதிப்பு ஏற்பட்டால் காதினுள் வீக்கம் ஏற்பட்டு அதாவது சிறு துரும்பு மாதிரி வளர்ந்து காதில் அடைப்பு ஏற்பட்டு விடும். பாதிப்பு நீண்ட நாட்களுக்கு இருந்தால் காதினுள் இருக்கும் அந்த சிறு துரும்பானது பாதிக்கப்பட்டு சீழ் வடிய ஆரம்பிக்கும். அது அதிக நாற்றத்துடன் வடிய ஆரம்பிக்கும்.

 

சீழ் வடிதலால் அதிக பாதிப்பு ஏற்பட்டு காதினுள் வலி உண்டாகும். இந்த வலி அதிகரித்து மூளையை கூட தாக்க ஆரம்பிக்கும்.

காது, மூக்கு, தொண்டை இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவை. அதனால் கண்டிப்பாக காது வலி ஏற்பட ஆரம்பிக்கும்.

 

இதனை எளிய முறையில் சரி செய்யும் வைத்திய முறைகளை பார்ப்போம்.

இதற்கு தேவையானப் பொருட்கள்:

 

1. இலவங்கப்பட்டை

2.தான்றிக்காய்

3.வறுத்த உளுந்துப்பொடி

 

இதனை எப்படி மருந்து பொருளாக மாற்றலாம் காதில் சீழ் வடிதலை எவ்வாறு நிறுத்தலாம் என்றும் பார்ப்போம்.

 

அடுப்பைப் பற்ற வைத்து அடுப்பில் வாணலியை சூடானதும் வைத்து சிறிது தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அரை பட்டையை ஒன்று இரண்டாக நசுக்கி போடவும். பட்டை சிறந்த வலி நிவாரணி வீக்கம் ஏற்பட்டால் அதை குறைக்க கூடியது.பின்பு அரை ஸ்பூன் தான்றிக்காய் பொடி போடவும். அடுத்து ஒரு ஸ்பூன் உளுந்து பொடி போடவும். தான்றிக்காய் ஒரு பங்கு என்றால் உளுந்தப் பொடி ரெண்டு பங்கு சேர்க்கவும். நன்றாக கொதிக்க வேண்டும்

 

 

உளுந்து நரம்புகளை நன்றாக துரிதப்படுத்தக் கூடியது. லவங்கப்பட்டை கிருமிகளை அழிக்க கூடியது. இது சிறந்த ஆன்ட்டி செப்டிக் பொருள். தான்றிக்காய் ஒரு உள்ளழல் ஆற்றி, அதாவது உள்ளிருக்கும் புண்களை ஆற்றக் கூடியது.

 

கலவை நன்றாக கொதித்து பால் போன்று வரும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஆற விடவும். பின் லேசான வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் பொழுது இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

 

 

இதனை பெரியவர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு 60 மி.லி எடுத்துக் கொள்ளவும். ஆகாரத்திற்குப் பின்னர் காலை,மாலை என இருவேளை எடுத்துக் கொள்ளவும் எடுத்துக் கொள்ளவும். நடுத்தர வயதினராக இருந்தால் ஒரு நாளைக்கு 50 மி.லி எடுத்துக் கொள்ள வேண்டும். 6-12 வயதுடைய பிள்ளைகளுக்கு பிள்ளைகளுக்கு 30 மில்லி கொடுக்க வேண்டும். சிறிய குழந்தைகள் எனில் மூன்று பில்லர் ‌ (1 பில்லர் 1 மி.லி) கொடுக்க வேண்டும். மூன்று வேளையும் கொடுக்க வேண்டும். நன்றாக ஜீரணித்து தூக்கத்தை உருவாக்கி வலியை நீக்கி காதில் உள்ள அசடுகளை நீக்கிவிடக் கூடியது.

 

 

 

இதனை ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட சரியான நிவாரணம் கிடைக்கும். சீழ் வடிதலால் காதில் ஏற்படும் நாற்றத்தை நீக்க நாம் இந்த கலவையை வடிகட்டியதில் பேஸ்ட் போல் உள்ளதை எடுத்து காதின் உள் மடல் மற்றும் வெளிமடலை சுற்றி கெட்டியாக பத்து போடவும். ஒரு மணி நேரம் நன்றாக காய்ந்ததும் காதினை சுற்றி இறுக்கும் உருவாக்கும். காதில் ஏற்படக்கூடிய அந்த சீலை வெளியே நீக்கிவிடும். நாற்றமும் இருக்காது. ஒரே நாள் இரவிலேயே பலன் தரக்கூடிய அற்புதமான மருந்து இது.

Exit mobile version