Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களுக்கு ULCER இருக்கா? அறிகுறிகள் மற்றும் தவிர்க்கபட வேண்டிய உணவுகள் இவை!!

இன்றைய காலகட்டத்தில் அல்சர் பாதிப்பு சாதாரண விஷயமாக மாறிவிட்டது.நாம் சாப்பிடும் உணவுகளும் வாழ்க்கை முறையும் அல்சர் வர முக்கிய காரணமாக இருக்கிறது.நேரம் கெட்ட நேரத்தில் ஹோட்டல் உணவுகள் உட்கொள்வது,காலை நேர உணவுகளை தவிர்ப்பது,காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் அல்சர் பாதிப்பு ஏற்படுகிறது.

அல்சர் பாதிப்பிற்கான காரணங்கள்:

1)காரம் சேர்க்கப்பட்ட உணவுகள்
2)மது பழக்கம்
3)துரித உணவுகள்
4)மோசமான உணவுப் பழக்க வழக்கங்கள்
5)நேரம் கடந்த உணவுப்பழக்கம்

அல்சர் அறிகுறிகள்:

1)நெஞ்செரிச்சல்
2)புளிப்பு ஏப்பம்
3)ஆசனவாய் எரிச்சல்
4)உணவு சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் நிலை
5)வாய்ப்புண்
6)சாப்பிடுவதில் சிரமம்
7)எடை இழப்பு
8)வாந்தி
9)குமட்டல் ஏற்படுதல்
10)வயிற்று வலி

அல்சர் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

**முதலில் ஹோட்டல் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.காரம் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

**ப்ரிட்ஜில் பதப்படுத்தி வைக்கப்படும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.வறுக்க,பொரிக்க’பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

**வெள்ளை சர்க்கரையை தவிர்க்க வேண்டும்.தேநீர்,காபியை தவிர்க்க வேண்டும்.உணவை சூடாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

**பூண்டு,வெங்காயம் போன்ற சல்பர் உணவுகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதிக புளிப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

**செரிமானமாக தாமதமாகும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

**சமைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

**அல்சர் இருப்பவர்கள் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.இயற்கையான குளிர்ச்சி நிறைந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

Exit mobile version