Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

படர்தாமரை நோய் உள்ளதா!!  5 நிமிடத்தில் படர்தாமரை நோய் குணமாக எளிமையான வழி இதோ!!

Do you have clover disease!! Here's a simple way to get rid of hemorrhoids in 5 minutes!!

Do you have clover disease!! Here's a simple way to get rid of hemorrhoids in 5 minutes!!

படர்தாமரை நோய் உள்ளதா!!  5 நிமிடத்தில் படர்தாமரை நோய் குணமாக எளிமையான வழி இதோ!!

உங்களுக்கு பல வருடங்களாக படர்தாமரை நோய் இருப்பதால் அதை குணமாக்க பல மாத்திரைகளும், ஆயில் மெண்டுகளும், பலவித சிகிச்சைகளையும் எடுத்தும் பலன் தந்திருக்காது. இந்த பதிவில் 5 நிமிடத்தில் பல வருடங்களாக இருக்கக் கூடிய படர்தாமரை நோயை குணமாக்குவது எவ்வாறு என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பல வருடங்களாக இருக்கும் படர்தாமரை நோயை குணப்படுத்த நாம் பாவற்காயை பயன்படுத்தப் போகிறோம். படர்தாமரை என்பது ஒரு பூஞ்சை தொற்று நோய் ஆகும். நாம் சுத்தமாக இல்லாமல் இருந்தாலும் சுத்தமான துணியை அணியாமல் இருந்தாலும் படர்தாமரை நோய் ஏற்படும். இந்த படர்தாமரை நோயை  பாவற்காயை வைத்து  குணமாக்க எவ்வாறு மருந்து தயாரிப்பது என்று தெரிந்து கொள்வோம்.

பாவற்காயில் உள்ள ஆண்டி பங்கல் பிராப்பர்ட்டி சத்துக்கள் படர்தாமரையை முழுவதுமாக குணப்படுத்தும். எலுமிச்சை பழத்தில் உள்ள ஆண்டி செப்டிக் சத்துக்கள் மற்றும் ஆண்டி பங்கல் பிராப்பர்ட்டி சத்துக்களும் படர்தாமரையை முழுவதுமாக குணப்படுத்தும். மஞ்சள் தூளில் உள்ள ஆண்டி செப்டிக் சத்து தோலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தும். படர்தாமரை உள்ள இடத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை இந்த ஆலிவ் ஆயில் தடுக்கும்.

இதை தயார் செய்யத் தேவையான பொருள்கள்…

* பாவற்காய்

* எலுமிச்சம் பழச்சாறு

* மஞ்சள் தூள்

* ஆலிவ் ஆயில்

செய்முறை…

ஒரு பவுலில் முதலில் பாவற்காயை துருவி எடுத்துக் கொள்ளவும். பிறகு இதில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதில் ஒரு பிஞ்ச் அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதில் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளவும்.

இதை ஒரு ஸ்பூனை வைத்து நன்கு அழுத்திக் கொள்ளவும். பாவற்காயின் சாறு இதில் இறங்கும் அளவு இதை அழுத்தவும். பிறகு இதை நன்கு கலந்துவிட்டு எடுத்துக் கொள்ளவும்.

இந்த மருந்தை படர்தாமரை உள்ள இடத்தில் பற்று போல தேய்த்து விட வேண்டும். பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் இதை அப்படியே வைக்க வேண்டும். பிறகு இதை தண்ணீர் கொண்டு கழுவி விடலாம். இதை தொடர்ந்து படர்தாமரைக்கு பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

Exit mobile version