உங்களுக்கு கடன் பிரச்சனையா? இந்த விளக்கை வீட்டில் ஏற்றுங்கள்! 

0
171

உங்களுக்கு கடன் பிரச்சனையா? இந்த விளக்கை வீட்டில் ஏற்றுங்கள்!

பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான சாணம், கோமியம், பால், நெய், தயிர் ஆகிய ஐந்தையும் சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இவை ஐந்தும் சரியான விகிதத்தில் கலந்து செய்யப்படும் பஞ்சகவ்யமானது தெய்வ சக்தியை பெறுகின்றது.

பஞ்சகவ்ய விளக்கை பயன்படுத்தும் முறை :பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு இலையின் மேல் தான் வைக்க வேண்டும். அதன் பிறகு அதன்மேல் பஞ்சகவ்ய விளக்கை வைக்க வேண்டும். அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.

இந்த பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றும்போது அதிலிருந்து வரும் புகையின் வாசம் ஹோமத்திலிருந்து வரும் வாசத்திற்கு நிகரானதாக இருக்கும்.

இந்த விளக்கின் திரி எரிந்த பின்பு, விளக்கும் சேர்ந்து எரிய ஆரம்பிக்கும். விளக்கு எரிந்த பின்பு கிடைக்கும் சாம்பல் தெய்வீக விபூதிக்கு சமமானதாகும். விபூதி தயாரிப்பில் பஞ்சகவ்யமும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த திருநீறை பூசிக் கொள்வதாலும் நன்மைகள் ஏற்படும்.

பஞ்சகவ்ய விளக்கை ஏற்ற உகந்த நேரம்:பஞ்சகவ்ய விளக்கை வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஏற்றுவதால் கோ பூஜை மற்றும் லட்சுமி நாராயண பூஜை செய்ததற்கும், ஹோமம் நடத்துவதற்கும் சமமாக கருதப்படுகிறது. வீட்டில் கன்றுடன் கூடிய பசுவின் படம் அல்லது கோமாதா படத்தின் முன்பு இந்த விளக்கை ஏற்றி வழிபடலாம்.

மேலும் கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி போன்ற சிறப்பான நாட்களில் பஞ்சகவ்ய தீபத்தை ஏற்றும்பொழுது பலமடங்கு நற்பலன்கள் நமக்கு உண்டாகும்.

வீட்டின் எதிர்மறை ஆற்றல்களை அடியோடு வெளியேற்றி சண்டை, சச்சரவுகளை நீக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி, லட்சுமி கடாட்சம் நிறைய செய்யும். மேலும், கடன் பிரச்சனைகள் குறைந்து வீட்டில் செல்வம் நிறைந்திருக்கும்.