Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருக்கா?.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்!!முற்றிலும் குணமாகிவிடும்…

உங்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருக்கா?.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்!!முற்றிலும் குணமாகிவிடும்…

 

கருப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படுவது கருப்பை நீர்க்கட்டிகள் ஆகும். மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச்செய்கிறது. அடிக்கடி அபார்ஷன் அதிக டெலிவரி மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு சர்க்கரை நோய் இரத்தக் கொதிப்பு உடல் பருமன் தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது. டெஸ்டோஸ்டிரான் அதிகரிப்பது புரோலாக்டின் அதிகரிப்பது ஆகியவற்றால் கருப்பை நீர்கட்டி வர காரணமாகின்றன. இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நல்லது.இவற்றை சரி செய்ய சில உணவுகளை நாம் எடுத்துக் கொண்டால் போதும். அவை பின்வருமாறு,இரும்புச் சத்து உணவுகள் அவசியம். உப்பை கண்டிப்பாக குறைக்கவும்.

குளிர்பானங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இனிப்பு வகைகள் ஐஸ்கிரீம் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.அரிசி உணவுகளையும் குறைக்க வேண்டும். உணவில் ஒரு கப் சாதத்துடன் இரண்டு கப் காய்கறி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

முளைக்கீரை மற்றும் வெந்தயக்கீரை ஆகியவற்றை வாரம் இரண்டு முறையாவது சேர்க்க வேண்டும். மேற்கூறியவற்றை நாம் உண்ணும் உணவில் எடுத்துக் கொண்டாலே போதும்.

 

Exit mobile version