உங்ககிட்ட சேதமடைந்த ரூபாய் தாள்கள் இருக்கா? இதை புதிய நோட்டுகளாக மாற்றுவது இனி ஈஸி!!
நம் இந்தியாவில் 10,20,50,100,200,500 ஆகிய ரூபாய் தாள்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.என்னதான் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வந்தாலும் ரூபாய் தாள் பயன்பாடு என்பது இன்றுவரை குறையாமல் இருந்து வருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
இவ்வாறு இருக்கையில் சில நேரங்களில் ரூபாய் நோட்டுகள் கிழிந்த சேதமடைந்த நிலையில் தங்கள் கைக்கு வந்துவிடும்.அதேபோல் சில கிழிந்த ரூபாய் நோட்டுகள் டேப் ஒட்டப்பட்ட நிலையிலும்,எரிந்த நிலையிலும் நம்மிடம் வந்துவிடும்.
இதை கடைகளில்,பொது இடங்களில் மாற்றுவது என்பது சிரமான ஒன்று.இதனால் சேதமடைந்த நிலையில் கிடைக்கும் ரூபாய் தாள்களை தேக்கி வைத்து விடுவோம்.ஆனால் இதுபோன்ற சேதமடைந்த கிழிந்த நிலையில் கிடைக்கும் ரூபாய் நோட்டுகளை எளிதில் மாற்றி விடலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை.
உங்களிடம் உள்ள கிழிந்த ரூபாய் தாள்களில் காந்தி படம்,அசோகா பில்லர் சின்னம்,சிக்னேச்சர் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்து இருந்தால் அரசு மற்றும் தனியார் வங்கியில் கொடுத்து அதற்கு நிகரான புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.
அதேபோல் ரூபாய் தாள் கிழிந்தாலும் அதன் முனையில் உள்ள எண்கள் டேமேஜ் ஆகாமல் இருந்தால் அதை அரசு அல்லது தனியார் வங்கியில் கொடுத்து எளிதில் மாற்றிக் கொள்ள முடியும்.
ஒருவேளை ரூபாய் தாள்கள் அதிகமாக சேதம் மற்றும் அழுக்கு அடைந்த நிலையில் அல்லது கருகிய நிலையில் இருந்தால் அதை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.