உங்களுக்கு கருப்பான அக்குள் இருக்கா! அதை குணப்படுத்த இதோ சில வழிகள்
கருப்பான அக்குள் உள்ளவர்கள் அனைவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் சில எளிமையான வழிகளை பயன்படுத்தி கருப்பான அக்குள் பகுதியை வெண்மையாக மாற்றிக் கொள்ளலாம்.
அக்குள் பகுதியில் கருப்பான நிறம் ஏற்படுவது சில சத்துக் குறைபாடுகள் காரணமாகத்தான். இதை எளிமையான சில வழிமுறைகளை பயன்படுத்தி சரி செய்ய முடியும். ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவதை விட நாட்டு மருத்துவ முறைகளை பயன்படுத்தி பக்க விளைவுகள் இல்லாமல் கருப்பான அக்குளை வெண்மையாக மாற்றலாம். அது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம்.
வழிமுறை 1…
கருப்பான அக்குளை வெண்மையாக மாற்றுவதற்கு டீ ட்ரீ ஆயிலை பயன்படுத்தலாம். கருப்பான அக்குளை வெண்மையாக மாற்றுவதற்கு முதலில் டீ ட்ரீ ஆயிலை சிறிதளவு தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை அக்குள் பகுதியில் கருப்பு நிறம் இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழிந்து இதை கழுவி விடலாம்.
வழிமுறை 2…
கருப்பான அக்குள் பகுதியை வெண்மையாக மாற்றுவதற்கு அரிசி மாவையும் பயன்படுத்தலாம். அதற்கு சிறிதளவு அரிசி மாவு எடுத்து அதை ரோஸ் வாட்டரில் கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதை ஒரு பஞ்சால் தொட்டு பின்னர் கருப்பான அக்குள் பகுதியில் தேய்த்து சிறிது நேரம் கழிந்து கழுவி விட்டால் அக்குள் பகுதியில் கருப்பு நிறம் மறையத் தொடங்கும்.
வழிமுறை 3…
அக்குள் பகுதியில் உள்ள கருப்பான நிறத்தை மாற்றுவதற்கு நாம் உருளைக்கிழங்கு சாற்றை பயன்படுத்தலாம். அதற்கு உருளைக்கிழங்கு சாறு எடுத்து அதை பஞ்சால் தொட்டு பின்னர் கருப்பான அக்குள் பகுதியில் தடவி விட வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழிந்து கழுவி விட வேண்டும்.
வழிமுறை 4…
ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தியும் நாம் கருப்பான அக்குள் பகுதியை வெண்மையாக பயன்படுத்தலாம். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து பின்னர் இதை அக்குள் பகுதியில் தேய்க்கலாம்.
வழிமுறை 5…
கருப்பான அக்குளை வெண்மையாக மாற்றுவதற்கு நாம் மஞ்சள் தூள் மற்றும் தேன் இரண்டையும் பயன்படுத்தலாம். அதற்கு மஞ்சள் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த பேஸ்டை கருப்பான அக்குள் பகுதியில் தேய்க்க வேண்டும்.
இதில் ஏதாவது ஒரு வழிமுறையை தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும். அவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அக்குள் பகுதியில் உள்ள கருப்பான நிறம் மறையாத தொடங்கும்.