கண்களை சுற்றி கருவளையம் உள்ளதா… அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்…

0
226

 

கண்களை சுற்றி கருவளையம் உள்ளதா… அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்…

 

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை நீக்குவதற்கு எவ்வாறு மருந்து தயாரித்து அதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி இரண்டு கண்களை சுற்றி கருவளையங்கள் இருக்கும். இந்த கருவளையங்கள் ஒரு சிலருக்கு ஊட்டச்சத்துக்கள் குறைபாடு காரணமாக ஏற்படும். ஒரு சிலர் இரவில் அதிக நேரம் கண் விழித்திருந்தாலும் கருவளையங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு மன அழுத்தம் காரணமாக கருவளையங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு டீஹைட்ரேஷன் காரணமாகவும் கருவளையங்கள் தோன்றும். ஒரு சிலருக்கு உணவில் அதிக அளவு உப்பு சேர்த்து சாப்பிடுவதாலும் கருவளையங்கள் தோன்றும்.

 

இந்த கருவளையங்கள் நம் முகத்தின் அழகை குறைத்து காட்டுகின்றது. இதனை சரி செய்ய என்னதான் மருந்துகள் பயன்படுத்தினாலும் சிகிச்சைகள் எடுத்தாலும் கருவளையங்கள் கண்களை விட்டு மறைந்திருக்காது. இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் இந்த வழிமுறையை பயன்படுத்தி நீங்கள் கருவளையங்களை முழுவதுமாக மறைய வைக்கலாம்.

 

இந்த பதிவில் வெறும் இரண்டு பொருள்களை வைத்து கருவளையங்களை மறைய வைக்கலாம். அந்த இரண்டு பொருள்கள் உளுத்தம் பருப்பு மற்றும் வெள்ளரிக்காய் மட்டும் தான். இந்த உளுத்தம் பருப்பு மற்றும் வெள்ளரிக்காய் இரண்டையும் வைத்து எவ்வாறு கருவளையங்களை மறைய வைப்பது என்று தெரிந்து கொள்வோம்.

 

கருவளையங்களை மறைய வைக்கும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* உளுத்தம் பருப்பு

* வெள்ளரிக்காய்

 

மருந்தை தயார் செய்யும் முறை…

 

முதலில் தேவையான அளவு உளுத்தம் பருப்பை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து பிறகு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். உளுத்தம் பருப்பு ஒரு மணி நேரம் ஊறிய பிறகு தேவையான அளவு ஊறிய உளுத்தம் பருப்பை எடுத்து மிக்சி ஜாரில் போட்டு அதில் வெள்ளரிக்காயை அறுத்து இரண்டு துண்டுகள் மட்டும் சேர்த்து நன்கு அரைத்துக் கெள்ளவும். கருவளையங்களை மறைய வைக்கும் மருந்து தயாராகிவிட்டது.

 

மருந்தை பயன்படுத்தும் முறை…

 

அரைத்து வைத்துள்ள இந்த மருந்தை கண்களை சுற்றியும் அதாவது கருவளையம் உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். மூன்று நிமிடம் கழித்து இதை கழுவி விடலாம். இது போல தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் மறைந்துவிடும்.