Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண்களை சுற்றி கருப்பு வளையம் உள்ளதா! இதை குணமாக்க சில வழிமுறைகள்!!

கண்களை சுற்றி கருப்பு வளையம் உள்ளதா! இதை குணமாக்க சில வழிமுறைகள்!!

 

நம்மில் சிலருக்கு கண்களை சுற்றி கருப்பு வளையங்கள் இருக்கும். இதை குணமாக்க நாம் பல சிகிச்சைகளை எடுத்திருப்போம். பலவித ஆயில்மென்ட், நாட்டு வைத்திய முறைகள் போன்றவற்றை பயன்படுத்தி இருப்போம். பலன் தராத வைத்தியமுறைகளை பயன்படுத்தி பயன் இல்லாமல் மனவருத்தம் தான் நமக்கு அதிகமாகி இருக்கும். இந்த பதிவில் இந்த கண்களை சுற்றி ஏற்படும் கருப்பு வளையங்களை மறைய வைக்க சில எளிய வைத்திய முறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 

இந்த கருவளையம் என்று அழைக்கப்படும் கருப்பு வளையங்கள் நம் உடலில் விட்டமின் சத்துக்கள் குறைவதால் ஏற்படுகின்றது. மேலும் இரவில் அதிக நேரம் கண்விழித்து இருப்பதால் இந்த கருவளையம் ஏற்படுகின்றது

 

கருப்பு வளையங்களை மறைய வைக்க சில எளிய வைத்திய முறைகள்…

 

* முதலில் நாம் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

 

* கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவு வகைகளையும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

 

* ஒரு வெள்ளரிக்காயை இரண்டு சிறிய துண்டுகளாக வெட்டி அதை கண்களின் மேல் 10 நிமிடம் வைக்க வேண்டும். இது போல தினமும் செய்தால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். மேலும் கருவளையம் மறையும்.

 

* இந்த கருவளையத்தை மறைய வைக்க ஆலிவ் எண்ணெயுடன் புதினா இலைகளை அரைத்து சேர்த்து அதனுடன் தேன் கலந்து அந்த கலவையை கண்களின் கருவளையம் உள்ள இடத்தில் தேய்த்து வர கருவளையம் மறையத் தொடங்கும்.

 

* பால், வாழைப்பழம், தேன் மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து அந்த கலவையை கண்களில் கருவளையம் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் கருவளையம் மறையத் தொடங்கும்.

 

* கருவளையம் மறைய சந்தனத்தையும் கஸ்தூரி மஞ்சளையும் ஒன்றாக கலந்து கண்களுக்கு கீழ் கருவளையம் உள்ள இடத்தில் தேய்க்கலாம்.

 

* கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை மறைய வைக்க அரிசியை அரைத்து தேய்க்கலாம்.

 

* உருளைக் கிழங்கு சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் நெய்யை எடுத்துக் கொள்ளவும். ஒரு துணியை வைத்து நெய்யையும் உருளைக்கிழங்கு சாறையும் நினைத்து அதை கண்களுக்கு கீழ் தேய்க்கலாம்.

 

Exit mobile version