Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கருமையான உதடு உங்களுக்கு உள்ளதா… உதடுகள் ஸ்டாபெர்ரி நிறமாக மாறுவதற்கு இதை செய்யுங்க!! 

கருமையான உதடு உங்களுக்கு உள்ளதா… உதடுகள் ஸ்டாபெர்ரி நிறமாக மாறுவதற்கு இதை செய்யுங்க…

 

நம்மில் சிலருக்கு கருமையான உதடுகள் இருக்கும். இந்த கருமையான உதடுகளை சிவப்பாக அதாவது ஸ்டாபெர்ரி பழத்தின் நிறத்தில் மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ன மருந்து தயாரிக்க வேண்டும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

நமக்கு கருமையான உதடுக்கள் இருக்க நிறைய காரணங்கள் இருக்கின்றது. சூரிய ஒளி நேரடியாக முகத்தால் படுவதால் உதடு கருமையாக மாறும். உதடுகளுக்கு இரத்த ஓட்டம் இல்லாததாலும் உதடுகள் கருமையாக மாறும். புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உதடு கருமையாக மாறும். புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கும் உதடு கருமையாக மாறும்.

 

மேலும் லிப்ஸ்டிக் போன்றவற்றை அழிக்காமல் அப்படியே விட்டால் நாளடைவில் உதடு கருமையாக மாறும். பருவநிலை மாற்றமும் உதடு கருமையாக காரணமாகும். மனச்சோர்வும் உதடு கருமையாக மாறுவதற்கு ஒரு காரணமாகும்.

 

இந்த உதடு கருமையை நீக்கி உதட்டை ஸ்டாபெர்ரி நிறத்தில் எவ்வாறு மாற்றுவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

இதை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* பீட்ரூட்

* தயிர்

* சோடா உப்பு

 

தயார் செய்யும் முறை…

 

முதலில் பீட்ரூட் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பீட்ரூட்டை நன்கு துருவிக் கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் துருவிய பீட்ரூட்டில் இருந்து அதன் சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 

பின்னர் ஒரு பவுல் எடுத்துக் கொண்டு அதில் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் எடுத்து வைத்துள்ள பீட்ரூட் சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் ஒரு டேபிள் ஸ்பூன் சோடா உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

இம்மூன்றையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். நன்கு கலந்து விட்டால் உதட்டு கருமையை போக்கி சிவப்பு நிறத்தில் தரக்கூடிய மருந்து தயாராகி விட்டது.

 

இந்த மருந்தை எடுத்து  கருமையாக உள்ள இரண்டு உதடுகளின் மேலும் தேய்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமையாக இருக்கும் உதடுகள் ஸ்டாபெர்ரி பழத்தின் நிறமாக மாறிவிடும்.

 

Exit mobile version