உங்களுக்கு முடி உதிர்தல் அதிகம் உள்ளதா!!! அதை தடுக்க இந்த இரண்டு பொருள்கள் போதும்!!!!

0
168
#image_title

உங்களுக்கு முடி உதிர்தல் அதிகம் உள்ளதா!!! அதை தடுக்க இந்த இரண்டு பொருள்கள் போதும்!!!!

நம்மில் பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனையான முடி உதிர்தல் பிரச்சனைக்கு வெறும் இரண்டு பொராள்களை வைத்து எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நெல்லிக்காய் என்பது ஆயுளை நீட்டிக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால் நெல்லிக்காயுடன் ஒரு பொருள் சேர்த்து தலைக்கு பயன்படுத்தினால் முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்யலாம்.

பொதுவாக நாம் அனைவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை என்பது உப்புத் தண்ணீரில் குளிப்பதாலும், தரமற்ற உணவுகளை உண்பதாலும், மலச்சிக்கல் பிரச்சனை இருப்பதாலும், ரத்த சோகை இருந்தாலும் பெண்களுக்கு மாதவிடாய் இருந்தாலும் முடி உதிரும்.

முடி உதிர்வை கட்டுப்படுத்த நெல்லிக்காயுடன் தயிர் சேர்த்து பயன்படுத்தலாம். நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள் நமது ஆயுளை நீட்டிப்பு மட்டுமில்லாமல் முடி உதிர்தல் பிரச்சனையை தீர்க்கும்.

தேவையான பொருட்கள்…

* பெரிய நெல்லிக்காய்(மலை நெல்லிக்காய்)
* தயிர்

செய்முறை…

முதலில் நெல்லிக்காயை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்சி ஜாரில் சிறிதளவு தயிர் சேர்த்து சிறு துண்டுகளாக நறுக்கிவைத்துள்ள நெல்லிக்காயை அந்த மிக்சியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த இந்த கலவையை தலையில் மாஸ்க் போல தடவிக் கொள்ளை வேண்டும். 20 நிமிடங்கள் கழிந்து இதை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் முடி உதிர்தல் பிரச்சனை இருக்காது.