Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு சொட்டு கரும்பு சாறு போதும்!! பாத வெடிப்பு முற்றிலும் நீங்கும்!!

Do you have foot ulcers? Use a sugar cane saw!!

Do you have foot ulcers? Use a sugar cane saw!!

ஒரு சொட்டு கரும்பு சாறு போதும்!! பாத வெடிப்பு முற்றிலும் நீங்கும்!!

நம் உடலில் நீர்ச்சத்து குறையும் போது தோல் வறண்டு பாதத்தில் வெடிப்பு உண்டாகும். அதிகமான உடல் எடையும் பாத வெடிப்புக்கு காரணமாகும்.  குளிர் காலத்தில் இயல்பாகவே  தோலில் வறட்சி உண்டாகும். அப்போது வெடிப்புகள் அதிகமாகி, புண், எரிச்சல் மற்றும் வலிகள் தோன்றும்.

பாதவெடிப்பில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு லேசான புண் ஏற்பட்டாலே அது பெரிய அளவில் பரவுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இந்த பாதவெடிப்பை சரியாக கவனிக்காமல் விட்டால் இந்த புண்கள், காலில் ஓட்டை விழும் அளவிற்கு பெரியதாக்கி விடும்.  இந்த பாதவெடிப்பை சரி செய்யக் கூடிய எளிய குறிப்பை பார்க்கலாம்.

முதலில் கரும்புச் சக்கையை எடுத்து கொள்ளுங்கள். இது கரும்பு ஜூஸ் போடும் கடைகளில் கேட்டால் தருவார்கள். ஈரமாக இருந்தால் காய வைத்து கொள்ளுங்கள். பிறகு இந்த கரும்புச் சக்கையை இரும்பு சட்டியில் போட்டு நன்றாக கருப்பாக ஆகும் வரை வறுத்து கொள்ளுங்கள். முழுமையாக கருப்பாக மாற வேண்டும். இரும்பு சட்டியில் போட்டு வறுக்கும் போது இதன் மருத்துவ குணங்கள் மாறாது.

இந்த சக்கை ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நைசான பவுடராக அரைத்து கொள்ளவும். இதை ஒரு கப்பில் போட்டுக் கொள்ளவும். பிறகு இதில் 1 டேபிள் ஸ்பூன் வாசலின் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். பிறகு இதில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவைபட்டால் மேலும் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொள்ளலாம். இது ஒரு களிம்பு பதத்தில் செய்து வைத்து கொள்ளவும்.

இதை ஈரமில்லாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம். இதை 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூளில் இருக்கும் மருத்துவ குணங்கள் பாதத்தில் இருக்கும் புண் மற்றும் எரிச்சலை கட்டுப்படுத்தும். கரும்புச் சக்கையில் இருந்து கிடைக்கும் அந்த கரியானது புண்களில் இருக்கும் பாக்டீரியாவை அழிக்கிறது மற்றும் வெடிப்பு விழுந்த தோல்களை இணைக்கிறது.

உங்களுக்கு லேசான வெடிப்பு மற்றும் வலிகள் இருந்தால் 7 நாட்கள் பயன்படுத்தினால் போதுமானது. மிகவும் பெரிதான வெடிப்பும், அதிகமான புண்களும் இருந்தால் 15 நாட்கள் வரை பயன்படுத்தவும்.

Exit mobile version