தலை முழுக்க இளநரை இருக்கா? இந்த டையை தடவினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருப்பாக மாறிவிடும்!!

0
85
#image_title

தலை முழுக்க இளநரை இருக்கா? இந்த டையை தடவினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருப்பாக மாறிவிடும்!!

நவீன காலத்தில் எல்லோருக்கும் இருக்கும் மிக பெரிய பிரச்சனை இளநரை. இதற்கு உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் காரணங்களாக சொல்லப்பட்டாலும் தலை முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

இளநரை ஏற்படக் காரணங்கள்:-

*முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்

*மன அழுத்தம்

*இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல்

*முறையற்ற தூக்கம்

இளநரையை கருப்பாக மாற்ற இயற்கை ஹேர் டை தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*மருதாணி பொடி – 1 தேக்கரண்டி

*வெள்ளை கரிசலாங்கண்ணி – 2 தேக்கரண்டி

*செம்பருத்தி பவுடர் – 1 தேக்கரண்டி

*வாழைப் பழத் தோல் – 4

*மாதுளை பழத் தோல் – 1 (முழு பழத் தோல்)

*கற்பூரவள்ளி இலை – 10

செய்முறை:-

அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து 4 வாழைப்பழத்தின் தோலை அதில் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மாதுளை பழத்தின் தோல் மற்றும் 10 கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

தண்ணீரின் நிறம் மாறி வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். அடுத்து அதில் 1 தேக்கரண்டி அளவு மருதாணி பவுடர், செம்பருத்தி பவுடர் 1 தேக்கரண்டி, வெள்ளை கரிசலாங்கண்ணி 2 தேக்கரண்டி அளவு சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.

10 நிமிடம் வரை ஊறவிட்டு பின்னர் தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி அப்ளை செய்து கொள்ளவும். பின்னர் 1 மணி நேரம் வரை ஊறவிட்டு தலையை எப்பொழுதும் போல் அலசிக் கொள்ளவும்.

இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை என்று தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இளநரை அனைத்தும் கருமையாக மாறிவிடும்.