இன்றைய காலகட்டத்தில் இளநரை பாதிப்பால் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.அதேபோல் ஆண்களுக்கு வெள்ளை தாடி பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது.ஆண்கள் பலர் இளம் வயதிலேயே தாடி நரைத்து வயதான தோற்றத்தை பெற்றுவிடுகின்றனர்.
எனவே வெள்ளை தாடியை கருமையாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)தக்காளி
2)எலுமிச்சை சாறு
3)தேங்காய் எண்ணெய்
செய்முறை:
ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தெடுக்கவும்.அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து விடவும்.
அரைத்த தக்காளி சாற்றை எலுமிச்சை சாற்றுடன் சேர்க்கவும்.இறுதியாக ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து தாடி முழுவதும் அப்ளை செய்யவும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி தாடியை சுத்தம் செய்யவும்.இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் வெள்ளை தாடி சில வாரங்களில் இயற்கையாக கருமையாகிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)நெல்லிக்காய் பொடி
2)தேங்காய் எண்ணெய்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் 25 கிராம் நெல்லிக்காய் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.இந்த பேஸ்டை தாடி முடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்தால் வெள்ளை தாடி அடர் கருமையாகும்.
தேவையான பொருட்கள்:
1)மருதாணி பொடி
2)நெல்லிக்காய் பொடி
செய்முறை:
20 கிராம் மருதாணி பொடி மற்றும் 20 கிராம் நெல்லிக்காய் பொடியை ஒன்றாக கலந்து கொள்ளவும்.பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக்கி தாடியில் தடவவும்.சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் பயன்படுத்தி தாடியை சுத்தம் செய்யவும்.இப்படி செய்தால் வெள்ளை தாடி கருப்பாகும்.