உங்களுக்கு இரத்த கொதிப்பு இருக்கா? இதை மருந்து மாத்திரை இன்றி குறைக்க சிறந்த வழிகள்!!
இன்றைய உலகில் பெரும்பாலானோர் இரத்த கொதிப்பு பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு ஏற்படக் கூடிய அதிகப்படியான மன அழுத்தம்,டென்ஷன் தான்.
அதிகப்படியான மன அழுத்தம்,போதை பழக்கம் மற்றும் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு இரத்த கொதிப்பு எளிதில் ஏற்பட்டு விடும்.ஒரு சிலருக்கு பரம்பரை தன்மை காரணமாக ஏற்படும்.இரத்த கொதிப்பு ஏற்பட்டால் அதை குறைக்க வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.
ஆனால் மருந்து,மாத்திரை இன்றி இரத்த கொதிப்பு பாதிப்பை நிரந்தரமாக குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
1)மூலிகை கசாயம்
தேவையான பொருட்கள்:-
*மிளகு
*தண்ணீர்
*வெந்தயம்
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 தேக்கரண்டி மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயம் போட்டு மிதமான தீயில் வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த பொடி சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் இரத்த கொதிப்பு குணமாகும்.
2)வெங்காய தேநீர்
தேவையான பொருட்கள்:-
1)பெரிய வெங்காயம்(நறுக்கியது) – 1/2 தேக்கரண்டி
2)தேன் – 1 தேக்கரண்டி
3)தண்ணீர் – 1 கிளாஸ்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் இரத்த கொதிப்பு அடங்கும்.
3)பூண்டு நீர்
தேவையான பொருட்கள்:-
1)பூண்டு பல் – 1
2)தேன் – 1 தேக்கரண்டி
3)தண்ணீர் – 1 கிளாஸ்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு பல் பூண்டை இடித்து சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் இரத்த கொதிப்பு அடங்கும்.