உங்களுக்கு உயர் ரத்த அழுத்தமா? BPயை குறைக்கக்கூடிய உணவு வகைகள்!
இன்றைய காலகட்டத்தில் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ளக்கூடிய நிலை தான் உள்ளது. ரத்தம் அழுத்தம் என்பது ஒரு பெரிய வியாதி அல்ல. உடலில் ஏதேனும் பிரச்சனை உள்ளது என்பதை காட்டும் ஒரு அறிகுறி.
நமது உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் வலி தொடர்ந்து இருக்குமானால் நம்முடைய ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நமது உடலில் ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் கழிவு பொருட்கள் உடலில் தேங்கியிருக்கும் பொழுது ரத்தக்குழாயின் சுருங்கி விரியும் தன்மை குறைந்து இரத்த அழுத்தம் உண்டாகலாம்.
மேலும் தேவையில்லாத மன குழப்பங்களால் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். எந்த காரணத்தினால் நமது உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்தது என்பதற்கான காரணத்தை கண்டறிந்து மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.
ரத்த அழுத்தம் அதிகரிக்கும் சமயங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளும் அதில் குறிப்பதற்கான முக்கிய காரணியாக மாறுகின்றன. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் உணவு வகைகளை பார்ப்போம்.
1. ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் ஒரு கப் அல்லது ஒரு கைப்பிடி வால்நட் எடுத்துக் கொள்ளலாம். இது சற்று கசப்பு சுவையுடையது. வால்நட்டின் இந்த கசப்பு சுவைக்கான அல்கலாய்டுகள் இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து ரத்த அழுத்தத்தை சீராக்கும். மேலும் இதில் மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்தோடு நல்ல கொழுப்பு அமிலங்களும் உள்ளன. நல்ல கொழுப்புகள் நமது ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தவிர்க்கும்.
2. அடுத்து ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஒரு முக்கிய பொருள் பீட்ரூட். பீட்ரூட்டில் உள்ள நைட்ரைடுகள் நமது ரத்த குழாய்களை இலகுவாக வைத்துக்கொள்ளும். சில ஆராய்ச்சிகள் தினமும் 200ml பீட்ரூட் சாறு எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்த அழுத்தமானது 20 mm முதல் 30 mm வரை குறைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
3. அடுத்த உணவு சீரகம் நமது மன அழுத்தத்தை குறைத்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர சீரகம் உதவுகிறது. மன அழுத்தம் சார்ந்த இரத்த அழுத்தத்திற்கு சீரகத் தண்ணீரை அருந்துதல் அல்லது சீரகட்டி போட்டு குடித்தல் ஆகியன மன அழுத்தத்தினால் ஏற்படும் ரத்த அழுத்தமானது குறையும்.
இவை மட்டுமில்லாமல் மோர், வாழைப்பழம், மத்தி மீன் ஆகியவற்றில் அதிகம் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவை கட்டுப்படுத்தி ரத்த அழுத்தத்தை பெருமளவு குறைக்க உதவுகிறது. இவை மட்டுமல்லாமல் தியான பயிற்சி மனப்பயிற்சியின் மூலமும் குறைக்கலாம்.