முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக இருக்கின்றதா? அதை சரி செய்ய கேரட்டை இப்படி பயன்படுத்துங்க!
முகச்சுருக்கம் என்பது வயதான நபர்களுக்கு வரும். அதாவது நம்முடைய தாத்தா, பாட்டி ஆகியோர்களுக்கு முகச்சுருக்கம் என்பது வரும். ஆனால் இன்றைய காலத்தில் அனைவருக்கும் முகச்சுருக்கம் வரத் தொடங்கி விட்டது.
அதற்கு காரணம் நாம் சருமத்தின் மீது காட்டும் குறைவான கவனம் தான். சருமத்திற்கு தேவையற்ற உணவுகளை வாங்கி உட்கொள்வது, தேவையில்லாத கிரீம்களை வாங்கி முகத்தில் பூசிக் கொள்வது ஆகியவற்றால் சருமம் பாதிக்கப்படும்.
முகச்சுருக்கம் இருந்தால் இனிமேல் சிகிச்சைக்காக எந்த மருத்துவமனைக்கும் போக வேண்டாம். கேரட்டை மட்டும் பயன்படுத்தினாலே முகச்சுருக்கம் சரியாகும். மேலும் சருமம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். எனவே முகச்சுருக்கத்தை மறையச் செய்யும் இதை எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* கேரட்
* அரிசி மாவு
செய்முறை…
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் கேரட்டை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்ததில் இருந்து கேரட் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்து அதில் சிறிதளவு அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த அரிசி மாவில் கேரட் சாறு சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த பேஸ்ட்டை முகத்தில் மாஸ்க் போல போட்டுக் கொண்டு சிறிது நேரம் கழிந்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் மறைந்து விடும்.