O ரத்த வகை உடையவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ரத்தத்தை தானமாக கொடுக்கலாம். இந்த O வகை ரத்தமானது A, B மற்றும் AB ஆகிய ரத்த வகை உருவாவதற்கும் முன்பே உருவானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் மற்ற ரத்த வகையைக் காட்டிலும் இந்த O இரத்த வகையினருக்கு செரிமானத்திற்கு ஏற்ற அமிலத்தன்மை இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இதனால் எந்த வகை இறைச்சியை அவர்கள் சாப்பிட்டாலும் செரிமான பிரச்சனை என்பது O இரத்த வகையினருக்கு ஏற்படாது. கீரைகள் மற்றும் பழங்கள் போன்ற ஆன்ட்டிஆக்சிடென்ட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களையும் இவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக பழங்களுள் திராட்சை பழம், எலுமிச்சை பழம், கொய்யாப்பழம் போன்ற பழங்கள் இவர்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் அவர்களுக்குள் இருக்கும் அமிலத்தன்மையை ஒரு நிலைப்பாடாக வைத்திருக்க இப்பழங்கள் உதவுகின்றன.
இவர்களுக்கு இயற்கையாகவே அமிலத்தன்மை அதிகமாக உள்ளதால் எளிதில் செரிமானம் அடைவது போல், எளிதாக அல்சர் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக 1950 களில் நடைபெற்ற ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்துகிறது. எனவே இவர்கள் உடல் எடைக்கு தகுந்தாற்போல் தினமும் தண்ணீரை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நமது உடலில் உள்ள எந்த திரவமும் அடர்த்தியாகாமல் இருக்கும். எனவே O இரத்த வகையினர் குறைந்த அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்தம் அடர்த்தியாக மாறி நச்சுப் பொருட்கள் உடலில் படிந்து விடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடும். இவ்வாறு நச்சுப் பொருட்கள் உடலில் தங்கி விடுவதால் தான் சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
எனவே O ரத்த வகையினருக்கு இந்த பிரச்சனை ஏற்படாமல் தடுக்க அவ்வப்போது பழச்சாறுகள் மற்றும் தண்ணீரை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். விட்டமின் K இவர்களது உடம்பில் குறைவாக இருப்பதாகவும் கூறுகின்றனர். எனவே விட்டமின் K அதிகம் உள்ள பொருட்களை இவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மீன், ஆட்டு ஈரல், பாதாம், பிஸ்தா போன்ற விட்டமின் K அதிகம் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று இந்த ரத்த வகையினர் குழுட்டன் சத்து உள்ள பொருட்களை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அதற்கு ஏற்ற உடல் உழைப்பை கொடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இயல்பாகவே இந்த O இரத்த வகையினருக்கு ஹைப்போ தைராய்டு நிலை குறைவாகவே இருக்கும். அவ்வாறு குறைவாக இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால் அம்முயற்சியானது பலன் அளிக்காது என்றும் அது தைராய்டு நிலையை பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.