உங்கள் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்கிறதா? இதோ உங்களுக்கான தீர்வு!

0
154
Do you have oily mucus on your face? Here is the solution for you!

உங்கள் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்கிறதா? இதோ உங்களுக்கான தீர்வு!

முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ளவர்கள்,வெயில் காலங்களில் தலையில் எண்ணெய் வைத்து விட்டு வெளியில் செல்லாதிர்கள்.எண்ணெய் தலையில் வைத்து விட்டு செல்வதால் வெயில் பட்டு முகம் கருமை நிறத்திற்கு மாறும் வாய்புகள் உள்ளது.இரவிலே எண்ணெயை தலையில் வைத்துக்கொண்டு காலையில் தலைகுளித்து விடுங்கள்.

வீட்டில் இருக்கும் பொழுது ஆப்பிள் பழச்சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் காய விடுங்கள்.அதன் பின் முகத்தை கழுவுங்கள்.உங்கள் முகத்தில் இருக்கும் கருமை மற்றும் எண்ணெய் பிசுக்கு நீங்கி விடும்.முகம் மிகவும் பொலிவுடன் காணப்படும்.இதன்பிறகு எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி காயவைத்து கழுவுவதினால் பருக்கள் வராது.

முகத்தில் எண்ணெய் பிசுக்கு உள்ளவர்களுக்கு அதன் அழுக்குக்கள் முகத்தில் தங்கி அதிக அளவு பருக்கள் வரும் நிலை ஏற்படும்.அந்த பருக்களை கட்டுப்படுத்த முதலில் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை குறைக்க வேண்டும்.

எண்ணெய் பிசுக்கை குறைத்தால் மட்டுமே முகத்தில் உள்ள பருக்களை குறைக்க முடியும்.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த கிரீம்களை மருத்துவர் பரிந்துரையின்றி  முகத்தில் பூசவே கூடாது.வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு நாம் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாகும்