உங்களுக்கு OILY SKIN? முகத்தை தொட்டாலே கையில் ஆயில் ஒட்டுகிறதா? இந்த பேஸ் வாஷ் ட்ரை பண்ணுங்க!!

0
109
Do you have oily skin? Does your hand feel oily when you touch your face? Try this base wash!!

உங்களுக்கு OILY SKIN? முகத்தை தொட்டாலே கையில் ஆயில் ஒட்டுகிறதா? இந்த பேஸ் வாஷ் ட்ரை பண்ணுங்க!!

வறண்ட சருமத்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ அதேபோல் தான் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள சருமத்தாலும் முகத்தில் கரும் புள்ளிகள்,கொப்பளங்கள் ஏற்படும்.முகத்தில் எண்ணெய் வழிந்தால் நம் முக அழகு பாதிக்கும்.

என்னதான் மேக்கப் போட்டாலும் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு இருந்தால் அவை கெடுக்கும் விதமாக தான் இருக்கும்.ஆண்களை விட பெண்களுக்கு தான் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்புகள் இருக்கும்.

பெண்களுக்கு ஹார்மோன் மாற்றம் ஏற்படுவதால் முகத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமாகிறது.முகத்தில் வழியும் எண்ணையை கன்ட்ரோல் செய்வது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தினமும் குளிர்ந்த நீரில் 5 முதல் 6 முறை முகத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.சோப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் சருமத்திற்கு ஏற்ற ஹோம் மேட் பேஸ் வாஷ்:

தேவையான பொருட்கள்:-

1)கடலை பருப்பு – 50 கிராம்
2)பச்சை பயறு – 50 கிராம்
3)எலுமிச்சை தோல் – 5
4)பச்சரிசி – ஒரு தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் 5 எலுமிச்சை தோலை வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.தொட்டாலே உடைய வேண்டும்.அந்த பக்குவத்தில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 50 கிராம் கடலை பருப்பு போட்டு மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.வாசனை வரும் வரை வருக வேண்டும்.கருகிடாமல் பார்த்துக் கொள்ளவும்.

அதேபோல் 50 கிராம் பச்சை பயறை இவ்வாறு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் வாணலி சூட்டில் ஒரு தேக்கரண்டி பச்சரிசியை போட்டு வறுக்கவும்.

இந்த பொருட்களை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் கொட்டிக் கொள்ளவும்.பிறகு அதில் எலுமிச்சை தோலை போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

ஒரு கிண்ணத்தில் அரைத்த பவுடர் 2 தேக்கரண்டி சேர்க்கவும்.பின்னர் 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.இதை முகம் முழுவதும் அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.

பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும்.இவ்வாறு தினமும் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருந்து வெளியேறும் எண்ணெய் பிசுபிசுப்பு கட்டுப்படும்.