இந்த மழைக்காலத்தில் சரும எரிச்சல்,அரிப்பு,கரும் புள்ளிகள்,சருமத் துளைகள் போன்ற சரும பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் அதில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் பேக்குகளை போடலாம்.
1)ரோஸ் வாட்டர்
2)ஆரஞ்சு பழத்தோல்
3)துவரம் பருப்பு
4)ஓட்ஸ்
முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் நன்கு காயவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
பிறகு ஒரு தேக்கரண்டி துவரம் பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.அதேபோல் ஒரு தேக்கரண்டி ஓட்ஸை வறுத்து ஆறவிடவும்.
இந்த இரண்டு பொருட்களையும் தனித் தனியாக அரைத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் அரைத்த ஆரஞ்சு பழத் தோல் பொடி சேர்த்து தேவைக்கேற்ப ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.பிறகு அரை மணி நேரம் உலரவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.இப்படி செய்து வந்தால் முகம் அழகாக ஜொலிக்கும்.
1)தக்காளி
2)தேன்
ஒரு தக்காளி பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து ப்ரீசரில் வைக்கவும்.
பிறகு இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.இப்படி செய்தால் பருக்கள்,சருமத் துளைகள் நீங்கும்.
1)சந்தனப் பவுடர்
2)மஞ்சள் தூள்
3)ரோஸ் வாட்டர்
ஒரு கிண்ணத்தில் 15 கிராம் சந்தனப் பவுடர்,10 கிராம் மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.பிராகி இதை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.இப்படி செய்தால் முகக் கருமை நீங்கி பளபளப்பாக மாறும்.