தொடர்ந்து இருமல் சளி இருக்கிறதா?? இதனைக் குடியுங்கள் சரி ஆகும்!!!

0
222
Do you have persistent cough cold?? Drink this and you will be fine!!!

தொடர்ந்து இருமல் சளி இருக்கிறதா?? இதனைக் குடியுங்கள் சரி ஆகும்!!!

குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சனைகள் ஒன்று சளி மற்றும் இருமல். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. தொடர்ந்து இருமல் இருப்பது நமக்கு தொந்தரவையும் உடல் சோர்வையும் ஏற்படுத்தும். தொடர்ந்து இருமலினால் அசகௌரியமாக உணர்வதோடு தொண்டைகளில் புண் ஏற்படலாம். இதனால் மருத்துவர்களிடம் சென்று நிறைய மாத்திரைகள் மருந்துகள், எடுத்துக்கொள்ள மருத்துவர் பரிந்துரை செய்திருப்பார். ஆனால் சில நாட்களில் அவற்றால் கூட சரி செய்ய முடியாமல் நீண்ட நாட்களுக்கு ஏற்படும் இருமல் சளியும் உண்டு.

குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் சளி. பொதுவாக பருவகால மாற்றங்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகள் சளி இருமல் மற்றும் காய்ச்சல். இதனை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் தீவிரமாவதை தடுக்க முடியும்.

சளியின் ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்யும் ஒரு எளிய கசாயம் முறையை பார்ப்போம். சளிக்கான அறிகுறிகள் தெரிய தொடங்கும் அப்போதே இந்த கசாயத்தை கொடுத்தால் சளியால் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் ஒரு ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நான்கைந்து கற்பூரவள்ளி இலைகளை போட வேண்டும். அதனுடன் இரண்டு வெற்றிலைகளையும் கிள்ளி சேர்க்கவும். எந்த ஒரு கசாயமாக இருந்தாலும் அதில் சேர்க்க வேண்டிய முக்கிய மூலப் பொருட்களில் ஒன்று சீரகம். ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் மிளகு சேர்க்கவும். மிளகை உடைக்க தேவையில்லை அப்படியே சேர்க்கலாம்.
கற்பூரவள்ளி இலை கிடைக்காத பட்சத்தில் துளசி இலைகளை பயன்படுத்தலாம்.

இல்லையெனில் தூதுவளை, ஆடாதொடை தும்பை இலைகளை பயன்படுத்தலாம். இவை அனைத்துமே சளியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

அடுப்பில் வைத்த கலவை நன்றாக கொதிக்க வேண்டும். 200 மில்லி தண்ணீர் சேர்த்து இருந்தால் நான்கில் ஒரு பங்கு அதாவது 50 மில்லி அளவு ஆகும் வரை தண்ணீர் நன்றாக சுண்ட வேண்டும். இப்பொழுது இதை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை வயதிற்கு தக்கவாறு அளவுகளை மாற்றி கொடுக்கலாம்.

ஒரு வயது குழந்தை என்றால் பத்து மில்லி அளவு கொடுக்கலாம். மூன்று வேளையும் , ஆகாரத்திற்கு முன்னும் பின்னும் கொடுக்கலாம்.

மாத்திரை மருந்து ஏதேனும் உட்கொண்டு இருந்தாலும் இவற்றை கொடுக்கலாம். ஏனெனில் இவை உணவு சார்ந்த மருந்து பொருட்கள் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

அடுத்து குழந்தைகளுக்கு சளியினால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று வாந்தி. இதற்கு சீரகம் இரண்டு பங்கும் திப்பிலி ஒரு பங்கும், குமிழ் நீக்கப்பட்ட கிராம்பு ஒரு மூன்றும், இதனுடன் ஏலக்காய் பாதி அளவு சேர்த்து வறுத்து, அரைத்து மெல்லிய துகள்களாக செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் அல்லது வெந்நீரில் குழப்பி குழந்தைகளுக்கு வாந்தி ஏற்படும் சமயங்களில் நாக்கில் தடவலாம். குழந்தைகளுக்கு வாந்தி ஏற்படும் சமயங்களில் உணவு உண்ண வற்புறுத்தக் கூடாது. குழந்தைகளின் பசி அறிந்து அதன் பின்பு உணவை உண்ணுமாறு அறிவுறுத்த வேண்டும்.

இந்த எளிய வைத்திய முறைகளை பயன்படுத்தி சளி இருமலுக்கான தீவிரமான அறிகுறிகளை தவிர்க்கலாம் மேலும் குளிர்காலங்களில் உண்ணும் உணவு சூடாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஆற வைத்த குளிர்ச்சியான உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி சிறிதளவு வெந்நீர் அருந்துவது நமது உடல் வெப்பநிலையை மேம்படுத்தும். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சளி இருமலை தடுக்கலாம்.