முகத்தில் மட்டும் தான் பருக்கள் வரும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறான எண்ணமாகும்.நமது உடலில் முதுகு,மார்பு,கை,கால்,அந்தரங்கம் என்று அனைத்து இடங்களிலும் பருக்கள் வரும்.
அந்தரங்க பகுதியில் பருக்கள் வந்தால் அவை மிகுந்த வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.பெண்களே இந்த அந்தரங்க பரு பாதிப்பை அதிகம் சந்திக்கின்றனர்.பிறப்புறுப்பில் எண்ணெய் சுரப்பி அதிகமாக சுரந்தால் பருக்கள் வரும்.அதேபோல் பாக்டீரியா மற்றும் அழுக்குகள் சேர்ந்தால் அவ்விடத்தில் பருக்கள் வரும்.
டைட்டான உடைகள்,ஹார்மோன் ஏற்றத்தாழ்வு,பிறப்புறுப்பை முறையாக சுத்தம் செய்யாமல் இருத்தல் போன்ற காரணங்களால் பருக்கள் உருவாகிறது.முகத்தில் தோன்றும் கொப்பளங்களை போலவே பிறப்புறுப்பு பகுதியில் பருக்கள் இருக்கும்.இவை சிறிய மற்றும் பெரிய அளவில் உருவாகி அதிக அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
பிறப்புறுப்பு பகுதி மென்மையாக இருப்பதால் அவ்விடத்தில் உருவாகும் பருக்கள் அதிக வலியை ஏற்படுத்துகிறது.இந்த பருக்களை நீக்குவது சற்று கடினமான விஷயம் என்றாலும் சில எளிய வைத்தியங்கள் மூலம் அதை அகற்ற முயற்சிக்கலாம்.
தீர்வு 01:
*கற்றாழை ஜெல்
*தேங்காய் எண்ணெய்
இவை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக மிக்ஸ் செய்து பிறப்புறுப்பு பகுதியில் உள்ள பருக்கள் மீது அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் உலர்ந்து உதிர்ந்துவிடும்.
தீர்வு 02:
*தயிர்
*மஞ்சள்
ஒரு தேக்கரண்டி தயிரில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக குழைத்து அந்தரங்க பகுதியில் உள்ள பருக்கள் மீது அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் நீங்கிவிடும்.
தீர்வு 03:
*வேப்பிலை
*கற்றாழை
*மஞ்சள்
வேப்பிலையை அரைத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளவும்.அடுத்து பிரஸ் கற்றாழை ஜெல் ஒரு தேக்கரண்டி எடுத்து வேப்பிலை பேஸ்ட்டில் மிக்ஸ் செய்யவும்.அடுத்து கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் கொட்டி மிக்ஸ் செய்து பிறப்புறுப்பில் உள்ள பருக்கள் மீது அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்யவும்.இந்த பேஸ்டை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பிறப்புறுப்பு பகுதியில் உள்ள கொப்பளம் பொடிந்துவிடும்.