கால் வலி மற்றும் நரம்பு சுண்டி இழுத்தல் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றதா? உடனே குணமாக இதனை செய்யுங்கள்!

0
1500

கால் வலி மற்றும் நரம்பு சுண்டி இழுத்தல் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றதா? உடனே குணமாக இதனை செய்யுங்கள்!

தற்போது உள்ள காலகட்டத்தில் வயதானவர்களுக்கு அதிகப்படியான நரம்பு சுண்டி இழுத்தல் மற்றும் கால் மறுத்த போக்குதல், கால் நரம்பு வலி ஆகியவை வருகின்றது. இதனை எவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் என்பது இந்த பதிவு மூலமாக காணலாம்

நம் உடம்பில் உள்ள நரம்புகளின் பெரிய நரம்பு என்பது நம் இடுப்பில் இருந்து கால் பகுதிக்கு செல்லக்கூடிய நரம்பு மண்டலமாகும். இதில் ஏதேனும் நரம்புகள் பலவீனம் அடைவதன் காரணமாக கால் வலி, நரம்பு இழுத்தல், கால் மறுத்த போகுதல் ஆகியவை ஏற்படுகிறது. இதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதை காணலாம்.

இஞ்சி எண்ணெய் இதை மருந்து கடைகள் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். கால் வலி, நரம்பு சுண்டி இழுத்தல், மற்றும் கால் மறுத்த போகுதல் ஆகியவை ஏற்படும் பொழுது இஞ்சி எண்ணெய் வழி உள்ள இடத்தில் வைத்து நன்றாக தேய்க்கும் பொழுது வலிகள் குறைக்கப்படுகிறது. நரம்பு மண்டலம் சீராக செல்வதற்கும் இஞ்சி எண்ணெய் உபயோகமாக உள்ளது.

குளிர்ச்சியான நீர் மற்றும் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு வலி உள்ள இடத்தில் வைத்து தேய்ப்பதன் மூலமாகவும் கால் வலி, நரம்பு சுண்டி இழுத்தல், கால் மறுத்த போகுதல்ஆகிய பிரச்சனைகள் குணமடையும். இவ்வித பிரச்சனையினால் அவதிப்பட கூடியவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை இதை செய்து வந்தால் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் குணமாகும்.

நரம்புகளில் உள்ள வலிகளை குறைப்பதற்கு பூண்டு ஒரு வலி நிவாரணையாகவும் பயன்படுகிறது. நான்கு துண்டு பூண்டு மற்றும் ஒரு கப் பால் மற்றும் தண்ணீர் ஆகிய மூன்றையும் வெதுவெதுப்பான சூட்டில் காய்ச்சி ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடித்து வருவதன் மூலமாகவும் இந்த பிரச்சனைகள் நீங்கும். ஒரு ஸ்பூன் மஞ்சள், ஒரு கப் பால் ஆகிய இரண்டையும் கொதிக்க வைத்து குடித்து வருவதன் மூலமாகவும் இந்த பிரச்சனை நீங்கும்.

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விட்டமின் பி 12 மிகுந்த உதவியாக உள்ளது. இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளான ஆட்டு இறைச்சி மற்றும் ஈரல் வகைகளில் அதிகப்படியாக உள்ளது. மீன் வகைகளிலும் அதிகப்படியான விட்டமின் பி12 நிறைந்துள்ளது. தினசரி நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.