உங்களுக்கு நியாபக மறதி அதிகமாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த சில மருந்துகள் இதோ!
நம் அனைவருக்கும் நியாபக மறதி என்பது இருக்கின்றது. அது ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்து நியாபக மறதி மாறுபடும். ஒரு சிலருக்கு நியாபக மறதி என்பது நோயாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு நியாபக மறதி திடீரென்று வரும்.
அதாவது கண் முன்னே ஒரு பொருளை வைத்துவிட்டு அதையே தேடிக் கொண்டிருப்பது, சொல்ல வந்த விஷயங்களை திடீரென்று மறந்து விடுவது, சின்ன சின்ன பொருட்களை மறந்த படி ஒரு இடத்தில் வைத்துவிட்டு மற்றொரு இடத்தில் தேடுவது போன்று பல செயல்கள் திடீர் நியாபக மறதியின் கீழ் வந்துவிடும். இந்த திடீரென்று ஏற்படும் நியாபக மறதியை ‘டோர்வே எபெக்ட்’ என்று அழைக்கப்படுகின்றது.
இந்த நியாபக மறதியை குணப்படுத்த ஆங்கில மருந்துகளை விட நாட்டு மருந்துகள் அதிகம் உதவி செய்கின்றது. அவ்வாறு நியாபக மறதியை குணப்படுத்த உதவும் மருந்துகள் பற்றி பார்க்கலாம்.
நியாபக மறதியை குணப்படுத்த உதவும் மருந்து வகைகள்…
* பிரமி நெய்யை காலை மற்றும் இரவு என்று இரண்டு வேலைகளிலும் 5 மி.லி அளவு எடுத்து சாப்பிட்டு வரலாம். இதனால் நியாபக மறதி குணமாகும்.
* வால்லாரை மாத்திரையை காலை மற்றும் இரவு என்று இரண்டு வேலைகளில் ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகள் சாப்பிட்டு வருவதன் மூலமும் நியாபக மறதியை குணப்படுத்தலாம்.
* அதே போல அமுக்கரா லேகியத்தை காலை மற்றும் இரவு என்று இரண்டு வேலைகளிலும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் நியாபக மறதி குணமாகும்.
* அதே போல நெல்லிக்காய் லேகியத்தை காலை மற்றும் இரவு என்று இரண்டு வேலைகளிலும் ஒன்று அல்லது இரண்டு கிராம் சாப்பிட்டு வந்தால் நியாபக மறதி குணமாகும்.
* சங்கு பூக்களை பறித்து அதில் டீ போட்டு குடித்து வந்தால் நியாபக மறதி குணமாகும்.
* அதே போல செம்பருத்தி பூவையும் குங்குமப் பூவையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் தேன் கலந்து குடித்து வந்தால் நியாபக மறதி குணமாகும்.