Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களுக்கு சுகர் இருக்கா? அப்போ இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!

#image_title

உங்களுக்கு சுகர் இருக்கா? அப்போ இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!

இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.காரணம் பரம்பரை தன்மை மற்றும் உணவுமுறை பழக்கம்.

சர்க்கரை நோய் வந்து விட்டால் உணவில் கடும் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.இல்லையென்றால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து விடும்.

மருத்துவர் வழங்கிய மருந்து மாத்திரைகளை உட்கொள்வதோடு உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவது மிகவும் முக்கியம்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

தினமும் வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதற்கு பதில் சிவப்பு அரிசி அல்லது கவுனி அரிசி சாப்பிட்டு வரலாம்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க இருக்கிறது.

இனிப்பு உணவுகளை நினைத்து பார்க்கக் கூடாது.கொஞ்சம் இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவல் எகிறிவிடும்.எனவே இனிப்பு பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

தயிர் சாப்பிடுவதை சர்க்கரை நோயாளிகள் முழுமையாக தவிர்க்க வேண்டும்.எலுமிச்சை ஜூஸ் குடிப்பதை தவிர்க்கவும்.

Exit mobile version