Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலை முடிக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இருக்கா!!! அப்போது இந்த 4 தவறுகளை மட்டும் செய்யாதீங்க!!! 

#image_title

தலை முடிக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இருக்கா!!! அப்போது இந்த 4 தவறுகளை மட்டும் செய்யாதீங்க!!!
நம்மில் பலருக்கும் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இருக்கும். அப்போது மறந்தும் கூட சில தவறுகளை நாம் செய்யக் கூடாது. அது என்னென்ன தவறுகள் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
நாம் உடல் நலத்தின் ஆரோக்கியத்தில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவுக்கு நாம் தலை முடியின் ஆரோக்கியத்திற்கும்  முக்கியத்துவம் கொடுக்கின்றோம். தலை முடியை பாதுகாக்கவும் தலை முடி உதிராமல் இருக்கவும் நாம் பலவிதமான எண்ணெய்கள் பயன்படுத்துகின்றோம்.
அப்பொழுது நாம் சில தவறான செயல்களை செய்கிறோம். எண்ணெய் தேய்த்து அப்படியே விட்டு விடுவது, அதிகமான எண்ணெய் தேய்த்து அதை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் விட்டு விடுவது போன்ற பல தவறுகளை செய்கின்றோம். இது போல எண்ணெய் தேய்க்கும் பொழுது செய்யக் கூடாத 4 தவறுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எண்ணெய் தேய்த்த பிறகு செய்யக் கூடாத 4 தவறுகள்!!!
* தலை முடிக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு நீண்ட நாட்கள் அப்படியே விட்டு விடக்கூடாது. அப்படியே விட்டுவிட்டால் தலையில் பூஞ்சை தொற்று ஏற்படும்.
* சிலர் படுக்கச் செல்லும் முன்பு எண்ணெய் தேய்க்க கூடாது. அவ்வாறு செய்யும் பொழுது எண்ணெய் முழுவதும் தலையில் இருக்கும். பூஞ்சை தொற்று பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இரவு படிக்கச் செல்லும் முன்பு எண்ணெய் தேய்க்கும் பொழுது இந்த எண்ணெய் தலையில் இருந்து முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை ஏற்படுத்தும். எனவே இரவு படிக்கச் செல்லும் முன்பு தலைக்கு எண்ணெய் தேய்க்கும் கூடாது.
* ஒரு சிலர் தலைக்கு எண்ணெய் தேய்த்த பிறகு தலைக்கு மோசமாக மசாஜ் செய்வார்கள். அவ்வாறு கடினமாக மசாஜ் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக நீங்கள் விரல்களை வைத்து மெதுவாக மசாஜ் செய்யலாம்.
* ஒரு சிலர் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பொழுது கடினமாக அழுத்தி தேய்ப்பார்கள். அவ்வாறு தேய்க்கும் பொழுது கூந்தல் அதன் மென்மை தன்மையை இழந்து விடுகின்றது. மேலும் கூந்தல் கரடு முரடான தன்மை பெறுகின்றது. இதனால் முடி உதிர்தல் பிரச்சனையும் ஏற்படும். இதனால் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பொழுது கடினமாக தேய்க்க வேண்டாம்.
Exit mobile version