என்னங்க ஒரே நெஞ்செரிச்சலா இருக்கா? ஜஸ்ட் 4 துளசி இலைகளை இப்படி பயன்படுத்தினால் ரிலீஃப் கிடைக்கும்!
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை கடைபிடிக்கும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.வாய் ருசிக்காக ஜங்க் புட்,பாஸ்ட் புட்,எண்ணெய் உணவுகள்,கொழுப்பு நிறைந்த உணவுகள்,காரமான உணவுகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த மோசமான உணவுபழக்கத்தால் நெஞ்செரிச்சல் உருவாகி மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.இந்த நெஞ்செரிச்சலை தடுக்க சிலர் விளம்பரங்களில் காண்பிக்கப்படும் மருந்துகளை உட்கொள்கின்றனர்.ஆனால் இவ்வாறான மருந்துகளை தவிர்த்து துளசி இலையை உட்கொண்டால் நெஞ்செரிச்சல் பாதிப்பு உடனடியாக குணமாகும்.
நெஞ்செரிச்சலால் ஏற்படும் பாதிப்புகள்:
1)வயிறு எரிச்சல்
2)வயிறு உப்பசம்
3)மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு
நெஞ்செரிச்சலை சரி செய்யும் வீட்டு வைத்தியம்:
முதலில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை நன்கு உலர்த்தி பொடியாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு கடாயில் 1/4 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.
அதன் பின்னர் உலர்த்தி வைத்திருக்கும் துளசி இலை பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விட வேண்டும்.250 மில்லி தண்ணீர் சுண்டி 200 மில்லியாக வரும் வரை கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.
இந்த நீரை தினமும் பருகி வந்தால் நெஞ்செரிச்சல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.
நெஞ்செரிச்சலை குணமாக்கும் மற்றொரு தீர்வு:
ஒரு பாத்திரத்தில் 250 மில்லி தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் 10 புதினா இலைகள்,ஒரு ஏலக்காய்,1/4 தேக்கரண்டி சோம்பு மற்றும் 1/4 தேக்கரண்டி கிராம்புப் பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு வடிகட்டி தேன் சேர்த்து அருந்தி வந்தால் நெஞ்செரிச்சல் முழுமையாக குணமாகும்.