Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை ஆஸ்துமா தான்!

#image_title

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை ஆஸ்துமா தான்!

பனி காலம் வந்தாலே ஒரு சிலருக்கு சளி இரும்பல், காய்ச்சல் போன்றவைகள் பாதிப்புகள் ஏற்படும் மேலும் காற்று மாசுபாடு, ஆஸ்துமா, காசநோய் போன்றவைகளாலும் இருமல் ஏற்படுகிறது. அவ்வாறான இரும்பல் நீண்ட காலமாக இருந்து வந்தால் அதை பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.

ஒருவருக்கு நீண்ட வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தால் அதனை நாட்பட்ட இருமல் என கூறுகின்றோம். அவ்வாறான இரும்பல் இருந்தால் தலைசுற்றல், சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழந்தல், விலா எலும்பு முறிவுகள், சோர்வு, வாந்தி, இரும்பல், தலைவலி, போன்ற பலவிதமான அறிகுறிகள் தோன்றும்.

அதிக அளவு இரும்பல் இருந்தால் அவை நுரையீரல் புற்று நோய், நுரையீரல் பைப்ரோஸிஸ் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொடர்ந்து இருமல் ஏற்பட்டால் பிரச்சனை ஏற்படும் இவ்வாறான பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

ஆஸ்துமா:

இருமல் மட்டுமே ஆஸ்துமாவின் ஒரே அறிகுறியாக மூச்சுத்திணறலை குறைக்க உள்ளது. இளம் வயதிலேயே நாள்பட்ட இருமலுக்கு சிகிச்சை அளித்து விட்டால் மூச்சு குழாய் ஆஸ்துமாவில் இருந்து விடுபடலாம்.

ஒருவருக்கு இருமல் ஏற்பட தூசி, புகை கடுமையான வாசனை போன்றவைகளும் காரணமாக இருக்கின்றது. மேலும் இருமல் தொடர்ந்து இருந்தால் ஆஸ்துமாவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அதனால் உடனடியாக அதற்கான சிகிச்சை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பல் இருந்தால் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக அதற்கான தீர்வுகளை காண வேண்டும்.

Exit mobile version