மின் மீட்டருக்கு மாத வாடகை செலுத்த வேண்டுமா? மின்சார வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் மின் கட்டணம் உயர்வு குறித்து தற்போது வெளிவந்த தகவலில் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் மின்மீட்டருக்கும் மாத வாடகை வசூலிக்க தமிழக மின்வாரிய வாரியம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மின்சார ஒழுகுமுறை ஆணையம் அதற்கு அனுமதி கொடுத்துவிட்டால் இனி மின் பயன்பாட்டாளர்கள் செப்டம்பர் மாதம் முதல் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை 120 ரூபாய் மின்மீட்டருக்கு என வாடகை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த கட்டணம் டிஜிட்டல் மீட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும் எதிர்காலத்தில் ஸ்மார்ட் மின் கட்டண மீட்டர்களை பொருத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் மாத வாடகையாக ரூ. 350 வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் வாடிக்கையாளர்கள் மாத வாடகை செலுத்துவதில் இருந்து தப்பிக்க மின்மீட்டரை விலை கொடுத்து வாங்கி கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
இது மட்டும் அல்லாமல் சேதம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் பழுதடியும் மின் மீட்டர்களை மாற்றுவது அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவது போன்ற பணிகளுக்கான கட்டணத்தை 100% உயர்த்திக் கொள்ளவும் தமிழ்நாடு மின்வாரியம் அனுமதி கேட்டுள்ளது. மேலும் மின் மீட்டாரை மாற்றுவது மற்றும் வேறு இடத்தில் மாற்றுவது சிக்கலில் பேஸ் எனப்படும் ஒரு முனை மின்சார இணைப்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ 500 மும்முனை மின்சார இணைப்பு கொண்டவர்களுக்கு ரூ 750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை முறையே 1000 மற்றும் 1500 ஆக உயர்த்துக் கொள்ளவும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மின்கட்டணம் மற்றும் மின்மீட்டருக்கு கட்டணம் உயர்வு குறித்து மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.