Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பல் சொத்தை இருக்கின்றதா! உடனே இவ்வாறு சரி செய்து கொள்ளுங்கள்!

பல் சொத்தை இருக்கின்றதா! உடனே இவ்வாறு சரி செய்து கொள்ளுங்கள்!

நீண்ட நாள் உள்ள பல் வலி மற்றும் பல் சொத்தைகளை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக காணலாம்.குறிப்பாக மழைக் காலங்களில் பல் வலிகள் பெரும்பாலானவருக்கு வருகின்றது. இந்த பல் வலியை மற்றும் பல் சொத்தைகளை வராமல் எவ்வாறு தடுக்கலாம் எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலமாக காணலாம்.

பல் வலியை உடனடியாக குணப்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டிய பொருள் கிராம்பு எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் இரண்டு டீஸ்பூன் எடுத்து நன்றாக கலக்கி சிறிதளவு பஞ்சு எடுத்து அதனை கலக்கி வைத்த எண்ணெயில் நனைத்து பல் வலி உள்ள இடத்தில் அந்த பஞ்ஜினை ஐந்து நிமிடம் வைக்க வேண்டும். சிறிது நேரத்தில் பல்வலி முற்றிலும் குணமடைந்து விடும்.

பல் சொத்தை வருவதற்கு காரணம் அதிக இனிப்புகளை சாப்பிடுவதனால் மற்றும் சாக்லேட் சாப்பிடுவதன் மூலமாகவும் ஏற்படும் மற்றும் சாப்பிட்ட பிறகு பற்கள் மற்றும் வாய் சுத்தம் செய்யாமல் இருப்பதன் காரணமாக பல் சொத்தை ஏற்படுகிறது.

பல் சொத்தை குணமாக்கவும் மற்றும் பல் சொத்தை வராமல் தடுக்கவும் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும் அதாவது ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்து வாயில் போட்டு ஐந்து நிமிடம் கொப்பளித்து துப்ப வேண்டும். இதை செய்வதன் மூலமாக வாயில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிகிறது.

பூண்டில் உள்ள ஆண்டிபயாட்டிக் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியாக்கள் அதிகம் நிறைந்துள்ளது இவை பல் சொத்தையை குணமாக்க உதவுகிறது. பேக்கிங் சோடா மற்றும் சால்ட் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை 100 கிராம் சம அளவில் எடுத்து நன்றாக கலக்கி அதனை காலையில் பல் துலக்கி வந்தால் பல் சொத்தை மற்றும் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அனைத்தையும் குணப்படுத்துகிறது.

 

 

Exit mobile version