Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முகத்தில் சுருக்கங்கள் இருக்கின்றதா? அதை சரிசெய்ய இந்த இரண்டு எண்ணெய் போதும்!

Do you have wrinkles on your face? These two oils are enough to fix it!

Do you have wrinkles on your face? These two oils are enough to fix it!

முகத்தில் சுருக்கங்கள் இருக்கின்றதா? அதை சரிசெய்ய இந்த இரண்டு எண்ணெய் போதும்!
நம்முடைய முகத்தில் இருக்கும் சுருக்கங்களை மறையச் செய்ய பலரும் அவரவர்களுக்கு தெரிந்த வைத்திய முறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பலர் மருத்துவர்களை அணுகி முகச் சுருக்கங்க மறையச் செய்ய தீர்வு காண செல்கிறார்கள். இதனால் நம்முடைய முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகின்றதோ இல்லையோ கையில் இருக்கும் பணம் கரைந்துவிடும்.
முகச் சுருக்கங்களை மறைய செய்ய செயற்கை மருந்துகள் தேவையில்லை. இயற்கையாக பல வழிகளில் முகச் சுருக்கங்களை மறைய செய்யலாம். அதில் மிகவும் எளிமையான வழிமுறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முகச் சுருக்கங்களை மறையச் செய்ய வெறும் இரண்டு எண்ணெய்களே போதும். மிகப் பெரிய அளவு பணம் செலவாகாது. தற்பொழுது முகச் சுருக்கங்களை எவ்வாறு மறையச் செய்வது அதற்கு தேவையான எண்ணெய்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான எண்ணெய்கள்:
* பாதாம் எண்ணெய்
* சூரியகாந்தி எண்ணெய்
செய்முறை:
ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் சூரிய காந்தி எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இரண்டையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். முகத்தில் உள்ள சுருக்கங்களை மறையச் செய்யும் மருந்து தயாராகி விட்டது.
பயன்படுத்தும் முறை:
இந்த எண்ணெய் கலவையை நம்முடைய முகத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். ஒரு. பத்து நிமிடம் அப்படியே விட்டு விடவும். பத்து நிமிடம் கழிந்த பிறகு கழுவி விடலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் மறையும்.
Exit mobile version