Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் பற்களில் மஞ்சள் கறைகள் இருக்கிறதா? அதை ஒரே நாளில் போக்க இப்படி செய்யுங்கள்!!

#image_title

உங்கள் பற்களில் மஞ்சள் கறைகள் இருக்கிறதா? அதை ஒரே நாளில் போக்க இப்படி செய்யுங்கள்!!

நம் அழகிய வெண் பற்கள் அழுக்கு படிந்த மஞ்சள் நிறத்திற்கு மாற உணவு முறை மாற்றம்,
புகை பிடித்தல், தேநீர், காபி அதிகம் பருகுதல் உள்ளிட்டவைகள் காரணங்களாக சொல்லப்படுகிறது. நம் தாத்தா பாட்டி காலத்தில் அனைவரும் வேப்பங்குச்சி, வாதநாராயணன் குச்சி வைத்து பல் துலக்கி வந்ததால் அவர்களுக்கு பற்கள் உறுதியாகவும், வெண்மையாகவும் இருந்தது. அதேபோல் பல் வலி, ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் சொத்தை ஆகுதல் உள்ளிட்ட எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை. ஆனால் தற்பொழுது பிரஸ், பேஸ்ட் உள்ளிட்டவைகளை வைத்து பல் துலக்குவதால் பற்கள் வலு இன்றி காணப்படுவதோடு, மஞ்சள் கறைகள் ஏற்படும் அபாயமும் உருவாகிறது.

இதற்கு இயற்கை வழி முறைகளை பின்பற்றினால் பல்லில் உள்ள மஞ்சள் கறை, அழுக்கு உள்ளிட்ட அனைத்தும் நீங்கி பல் ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*ஆரஞ்சு பழத் தோல் – சிறிதளவு

செய்முறை:-

தேவையான அளவு ஆரஞ்சு பழத் தோலை எடுத்து அதை வெளியிலில் உலர்திக் கொள்ளவும். பின்னர் அவை நன்கு உலர்ந்து வந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

இதை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதில் இருந்து 1 தேக்கரண்டி அளவு ஆரஞ்சு தோல் பவுடரை எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழப்பிக் கொள்ளவும்.

பிறகு பல் துலக்கும் பிரஷில் ஆரஞ்சு பழத் தோல் பேஸ்டை போட்டு பற்களை நன்கு துலக்க வேண்டும். பின்னர் சுத்தமான தண்ணீர் கொண்டு வாயை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்வது வந்தோம் என்றால் பல்லில் காணப்பட்ட மஞ்சள் கறைகள் அனைத்தும் முழுமையாக நீங்கி விடும். இது இயற்கை முறை என்பதால் பற்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

Exit mobile version