சொந்த கார் வச்சிருக்கீங்களா?? அப்போ காரை இந்த திசையில் நிறுத்தாதீர்கள்!!
சொந்த வீடு வைத்திருக்கும் பலரும் சொந்தமாக கார் வாங்கி தங்களுடைய வீட்டில் போர்ட்டிகோவில் நிறுத்தி வைக்க ஆசைப்படுவார்கள்.ஆனால் எந்த திசையில் காரை நிறுத்தினால் தங்களுக்கு நல்ல பலனை தரும் என்பது தெரியாமல் இருக்கிறது.
கார் நிறுத்துவதற்கு எந்த திசை சிறந்தது. கார் ஷெட் எந்த பகுதியில் வைக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
செய்யக்கூடாதவை:
வடகிழக்கு மூலை எனப்படும் ஈசான்யம் பகுதியில் எந்த ஒரு கனமான பொருளையும் வைக்கக்கூடாது.
மறந்தும் கூட கார் பார்க்கிங்கை ஈசான்யம் பகுதியில் அமைக்க வேண்டாம் என்று பொதுவான வாஸ்து விதியாக சொல்லப்படுகிறது.
ஒரு சிலர் தங்களின் தலைவாசலை ஈசன்யம் பகுதியில் அமைத்திருப்பார்கள். அந்த பகுதியிலேயே போர்டிகோ அமைத்து கார் பார்க்கிங் வைத்திருப்பார்கள். அது தவறான செயல் ஈசான்யம் பகுதியில் கார் பார்க்கிங் அமைப்பதை தவிர்ப்பது நல்லது என்று வாஸ்து சாஸ்திர படியும் ஆன்மீக ரீதியாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சரியான திசை:
போர்ட்டிகோ அமைக்கும்போது வடக்கு, கிழக்கு திசையில் கார் நிறுத்துமாறு அமைப்பது சிறந்தது.
தொழிலதிபர்கள் வடக்கு திசை நோக்கியும், அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் கிழக்கு திசை நோக்கியும் காரை நிறுத்துவது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.
வீட்டின் நுழைவாயிலை பொறுத்து தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் கார் பார்க்கிங் அமைக்கப்படுவது நல்லதாம். மேலும், வடமேற்கு திசையில் காரை நிறுத்துவது விசேஷமாக சொல்லப்படுகிறது.
வீட்டுடன் ஒட்டியிருக்காத வகையில் கார் ஷெட் அமைப்பதே நல்லது என்று வாஸ்து சாஸ்திர கூறப்பட்டுள்ளது.
வீட்டின் காம்பவுண்ட் சுவரில் இருக்கும் கேட்டுகளை விட கார் ஷெட்டின் கேட்டுகள் உயரம் குறைவாக அமைக்க வேண்டுமாம். அதேபோன்று, முழுமையாக திறந்து மூடும் வகையில் அமைக்கப்படுவதும் அவசியம்.
சிறந்த நிறம்:
கார் ஷெட்டிற்கு வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட வெளிர் வண்ணங்களை கார் ஷெட்டில் பூசுவதும் நல்லது அது நேர்மறை எண்ணங்களை அதிகரிக்குமாம். கருப்பு, சிவப்பு, சாம்பல் நிறம், அடர் நீலம் போன்ற நிறங்களை தவிர்த்து விட வேண்டும். கார் ஷெட்டில் தேவையற்ற பொருட்களையும், தீப்பற்றும் பொருட்களையும் வைக்க வேண்டாம்.
பெரிய கார் வைத்திருப்பவர்கள் தென்மேற்கு எனப்படும் கன்னி மூலை பகுதியில் கார்களை நிறுத்த ஷெட் அமைக்கலாம். தென்கிழக்கு பகுதியில் கார் ஷெட் அமைப்பதன் மூலம் சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பண வருமானமும் அதிகரிக்கும்.