Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட்டை துண்டு ஊறவைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

நம் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்று இலவங்கப்பட்டை.வாசனை நிறைந்த மூலிகை பொருளாக திகழும் பட்டையில் எக்கச்சக்க நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.

பிரியாணி,அசைவ உணவுகளில் இலவங்கப்பட்டையின் பங்கு முக்கியமானது.அதேபோல் தான் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பதிலும் இலவங்கப்பட்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

இலவங்கப்பட்டை ஊட்டச்சத்துக்கள்:

*இரும்பு
*மாங்கனீசு
*கால்சியம்
*மெக்னீசியம்
*ஜிங்க்
*பொட்டாசியம்
*ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்

இலவங்கப்பட்டை பானம் பயன்கள்:

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு பீஸ் இலவங்கப்பட்டையை போட்டு ஊறவைத்து பருகி வந்தால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்தால் இனி மிஸ் பண்ணமாட்டீங்க.

*இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்துக் கொள்ள பட்டை பானம் பருகலாம்.செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் பட்டை ஊறவைத்த பானத்தை குடித்து பலன் பெறலாம்.

*உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பட்டை ஊறவைத்த பானம் எடுத்துக் கொள்வது சிறந்த தீர்வாக இருக்கும்.

*மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி குணமாக இலவங்கபட்டை நீர் பருகலாம்.

*சொத்தைப்பல் வலி ஏற்பட்டால் இலவங்கப்பட்டை நீர் கொண்டு வாய் கொப்பளிக்கலாம்.இதய நோய் அபாயம் குறைய பட்டை தண்ணீர் பருகலாம்.

*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பட்டை நீர் பருகலாம்.உடலில் படிந்துள்ள தேவையற்ற நச்சுக் கழிவுகள் வெளியேற இலவங்கப்பட்டை நீர் பருகலாம்.

*செரிமானப் பிரச்சனை சரியாக இலவங்கப்பட்டை நீர் பருகலாம்.இலவங்கப்பட்டை பொடித்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

*இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பை பொடித்து பல் துலக்கி வந்தால் மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளிச்சிடும்.

*தினமும் ஒரு கிளாஸ் இலவங்கப்பட்டை தண்ணீர் பருகி வந்தால் வயிறு ஆரோக்கியம் மேம்படும்.

*நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் இலவங்கப்பட்டை பானம் செய்து பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Exit mobile version