Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாரத்தில் 2 முறை அகத்தி கீரை ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

#image_title

வாரத்தில் 2 முறை அகத்தி கீரை ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குவதில் கீரை வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் அகத்தி கீரையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.

அகத்திக்கீரையில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:-

நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து, தாதுப்புக்கள், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

இந்த அகத்தியில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற பூக்கள் கொண்ட அகத்தி என்று இரு வகைகள் இருக்கிறது. இந்த அகத்தி கீரையில் மட்டுமல்ல அதன் பூ, வேர், பட்டை என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கிறது.

அகத்தி கீரையில் பொரியல், ஜூஸ், வடை, சட்னி, கூட்டு என பல வகை உணவுகள் தயார் செய்து உண்ணப்படுகிறது. இந்த அகத்தி கீரையில் ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

அகத்தி கீரை ஜூஸின் நன்மைகள்:-

**வறட்டு இருமல் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் அகத்தி இலை ஜூஸ் 1/4 டம்ளர் வீதம் அருந்தினால் உடனடி பலன் கிடைக்கும்.

**நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பை சரி செய்ய அகத்தி கீரை ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கும்.

**உடல் சூடு, பித்தம் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்படுபவர்கள் அகத்தி கீரை ஜூஸ் எடுத்து வரலாம்.

**வாத நோயையும் சரி செய்யும் தன்மை அகத்தி கீரை ஜூஸ்க்கு இருக்கிறது.

*வயிற்று வலியை குணமாக்க அகத்தி இலையை ஜூஸ் + தேன் கலந்து பருகலாம்.

**அல்சர், வாய் புண் மற்றும் வயிற்றுப்புண் இருப்பவர்களுக்கு அகத்தி ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கும்.

*உடலில் உள்ள எலும்பு வளர்ச்சிக்கு இந்த ஜூஸ் உதவியாக இருக்கும்.

*இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, இரத்தம் தொடர்பான பாதிப்பு நீங்க இவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.

**அடிக்கடி அகத்தி கீரை ஜூஸ் பருகினால் குடல்புண், அரிப்பு, சொறி சிரங்கு உள்ளிட்ட தோல் நோய் பாதிப்புகள் சரியாகும்.

**இளநரை, வறண்ட சருமம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உரிய தீர்வாக அகத்தி கீரை ஜூஸ் இருக்கிறது.

அகத்தி கீரை ஜூஸ் தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*அகத்தி கீரை – 1/4 கப்

*எலுமிச்சை சாறு – சிறிதளவு

*தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை…

1/4 கப் அகத்தி கீரையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டிக் கொள்ளவும். பிறகு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

Exit mobile version