“மஞ்சள் + எலுமிச்சை” சாறு பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

0
76
#image_title

“மஞ்சள் + எலுமிச்சை” சாறு பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

இந்தியர்களின் உணவில் மஞ்சள் பயன்பாடு அதிகம் இருக்கும். இந்த மஞ்சளை உணவில் சேர்க்க அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தான் காரணம்.இயற்கை கிருமி நாசினி என்று அழைக்கப்படும் மஞ்சள் நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

மஞ்சளில் ‘குர்க்குமின்’ என்ற வேதிப்பொருள் நிறைந்து இருக்கிறது. இவை சளி, இருமல், ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய சிறந்த ஒன்றாக இருக்கிறது. அதுமட்டும் இன்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி- ஏஜிங் உள்ளிட்டவை நிறைந்து இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்றாக இருக்கிறது.

எலுமிச்சையில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து இருக்கிறது. எலுமிச்சை சாறு, தோல், விதை, இலை என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றது. நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி என்று பல சத்துக்களை எலுமிச்சை பழம் உள்ளடக்கி வைத்துள்ளது. அதிக மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சை + மஞ்சளை வைத்து தேநீர் செய்து சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

* எலுமிச்சை – பாதி அளவு

*தூயத் தேன் – சிறிதளவு

*பட்டை தூள் – 1 சிட்டிகை அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அடுப்பை அணைத்து விடவும்.

பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, சிறிதளவு தூயத் தேன் மற்றும் 1 சிட்டிகை அளவு பட்டை தூள் சேர்த்து கலந்து பருகவும்.

“மஞ்சள் + எலுமிச்சை” சாறு பருகினால் உடலுக்கு கிடைக்கும்:-

*இந்த சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தோம் என்றால் தொப்பை குறையும்.

*இந்த சாறு உடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது.

*இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க இந்தமஞ்சள் + எலுமிச்சை சாறு பெரிதளவில் உதவுகிறது.

*மலச்சிக்கல் பாதிப்பு இருப்பவர்கள் தினமும் இந்த சாற்றை பருகி வாருங்கள். விரைவில் உரியப் பலன் கிடைக்கும்.

*மூளை தொடர்பான பாதிப்பை சரி செய்ய இந்த சாறு பெரிதும் உதவுகிறது.

*உடலின் முக்கிய உள் உறுப்பான கல்லீரலை மேம்படுத்த உதவுகிறது. அதேபோல் செரிமானக் கோளாறு இருப்பவர்களுக்கு இந்த சாறு சிறந்த தீர்வாக இருக்கும்.

*இந்த சாற்றை பருகுவதினால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.