மாத்திரை இன்றி BPயை கட்டுப்படுத்தும் இந்த பாட்டி வைத்தியம் பற்றி தெரியுமா?

0
257
#image_title

மாத்திரை இன்றி BPயை கட்டுப்படுத்தும் இந்த பாட்டி வைத்தியம் பற்றி தெரியுமா?

உயர் இரத்த அழுத்தம் குறைய அதிகளவு மாத்திரை உட்கொள்பவர்கள் அதை தவிர்த்து விட்டு இயற்கை வழியில் தீர்வு காண முயலுங்கள்.இதனால் உரிய பலன் கிடைப்பதோடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மது மற்றும் புகை பழக்கம்,உடல் பருமன்,டீ காபி அதிகளவு எடுத்துக் கொள்ளுதல் போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.

அதுமட்டும் இன்றி அடிக்கடி கோபப் படுத்தல்,டென்ஷன் ஆகுதல் போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் குறைய எளிய தீர்வு:-

1)எலுமிச்சை சாறு
2)ஹனி

ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

1)கேரட்
2)தேன்

ஒரு கேரட்டை நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

இந்த சாற்றை ஒரு கிளாஸிற்கு ஊற்றி ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

1)இஞ்சி
2)தேன்

ஒரு கிளாஸ் அளவு நீரில் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.