தொழில் முனைவோர்களை உருவாக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா?

0
275
#image_title

தொழில் முனைவோர்களை உருவாக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா?

நம்முடைய நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு என்று பலத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. விவசாயிகளுக்கு, ஏழை மக்களுக்கு மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு என்று பல பயனுள்ள திட்டங்களின் வரிசையில் உள்ளது இந்த முத்ரா கடன்.

தொழில் செய்ய விருப்பம்.. ஆனால் முதலீட்டிற்கு பணம் இல்லை.. என்று வருந்தும் நபர்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இவை. கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டில் உள்ள திட்டத்தால் கோடிக்கணக்கான மக்கள் தொழில் முனைவோராக உயர்ந்துள்ளனர்.

மூன்று பிரிவுகளை கொண்ட இந்த திட்டத்தில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற முக்கிய காரணம் கடன்.. சிரமம் இன்றி எளிதில் கிடைத்துவிடும் என்பது தான்.

முத்ரா கடன் பெற என்னென்ன தகுதி இருக்க வேண்டும்?

தொழில் தொடங்க விருப்பம் இருந்தால் போதும்.. முத்ரா கடன் கிடைத்துவிடும்.

விண்ணப்பம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்…

*ஆதார் கார்டு
*பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
*என்ன தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்பது குறித்த விவரம்
*நீங்கள் தொழில் அமைக்க உள்ள இடம் குறித்த விவரம்
*பான் கார்டு
*நீங்கள் செய்யும் தொழிலுக்கு தேவைப்படும் உபகரணங்களுக்கான கொட்டேஷன்
*வங்கி விவரம்

விருப்பமான தொழிலில் முன்னேறுவதற்கு யோசனை உள்ளவர்களுக்கு இந்த முத்ரா கடன் திட்டம் பேருதவியாக இருக்கின்றது. பிறருக்கு கீழ் வேலை செய்யாமல் தொழில் முனைவோராக மாற விரும்பும் நபர்களுக்கு முத்ரா கடன் ஒரு வரப் பிரசாதம் ஆகும்.