Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

#image_title

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு என்று பல நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. “பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா” என்ற திட்டத்தின் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று தவணைகளாக ரூ. 6000 வழங்கி வரும் மத்திய அரசு “பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா” என்ற பென்சன் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அரசு அங்கீகரித்துள்ள வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும். பிறகு இந்த திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு கேட்கப்படும் ஆவணங்களை இணைத்து வங்கியில் வழங்கவும்.

பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்திற்கு விண்னப்பம் செய்ய தகுதி

விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

18 வயது முதல் 40 வயது வரை இருக்கின்ற விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்:

1)ஆதார் எண்
2)வாக்காளர் அட்டை
3)விண்ணப்பதாரர் போட்டோ
4)வருமான சான்றிதழ்
5)நில விவரம்
6)வங்கி கணக்கு எண்
7)தொலைபேசி எண்

விவசாயிகள் மாந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்திற்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தி வர வேண்டும். தாங்கள் 60 வயதை நிறைவு செய்த பின்னர் மத்திய அரசு தங்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 பென்சனாக வழங்கும். இந்த திட்டத்தில் சேர்ந்த விவசாயிக்கு திட்டம் முடிவதற்குள் இறப்பு ஏற்பட்டால் அவரது மனைவிக்கு ரூ.1500 நிதி வழங்கப்படும்.

Exit mobile version