நடிகர் கார்த்தியின் அடுத்த படம் எந்த இயக்குனருடன் தெரியுமா? ஆஹா இவர் முரட்டு இயக்குனரே!

0
140

நடிகர் சிவகுமார் என்றாலே நினைவுக்கு வருவது அவரின் பிள்ளைகள் மட்டுமே. அண்ணன் சூர்யா தம்பி கார்த்திக் இருவரும் திரையுலகில் சரிக்கு சரியாக பேரும் புகழும் சம்பாதித்து வருகின்றனர். 

நடிகர் சூர்யாவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் அளவுக்கே தற்போது  நடிகர் கார்த்திக்கும் ரசிகர் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் கார்த்திக் நடித்த திரைப்படங்களில் பல திரைப்படங்கள் நல்ல வசூலையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது சில திரைப்படங்களை ப்ளாப் ஆகி உள்ளது.  

நடிகர் கார்த்தியின் திரைப்படம் என்றாலே  மக்கள் மத்தியில்,  திரைப்படம் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக காணப்படுகிறது.

ரசிக பெருமக்கள் தங்கள் குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்று நடிகர் கார்த்தியின் திரைப்படங்களை கண்டு மகிழ்வர் ஏனென்றால் இவர் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் குடும்ப கதைகளை கருவாக கொண்டிருக்கும். மேலும் இவர் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புது இயக்குனருடன் கூட்டணி அமைத்து தனது திரைப்படங்களை நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் இயக்குனர் கொம்பன் முத்தையா உடன் மீண்டும் கூட்டணி அமைத்து தனது அடுத்த திரைப்படத்தை நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்  இந்த இயக்குனருடன் கூட்டு சேர்வது இதுவே இரண்டாவது முறையாகும் வேறு எந்த இயக்குனர்  உடனும் இவர் இரண்டாம் முறை கூட்டணி அமைக்க வில்லை  என்பது முக்கியமானதாகும். இந்த கூட்டணியில் அமையப்போகும் இந்த திரைப்படம் நல்ல வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.