பழனி பஞ்சாமிர்தம் எப்படி வீட்டிலேயே செய்யலாம்ன்னு தெரியுமா? இதோ பாருங்க..

0
62
#image_title
பழனி பஞ்சாமிர்தம் எப்படி வீட்டிலேயே செய்யலாம்ன்னு தெரியுமா? இதோ பாருங்க…
பழனி பஞ்சாமிர்தம் என்றாலே நம் நாக்கில் எச்சில் ஊறும். அந்த அளவிற்கு அதன் சுவை அப்படி இருக்கும். பொதுவாக பெருமாள் கோயில்களில் தேங்காய் பழ பஞ்சாமிர்தத்தால் பெருமாளுக்கு அபிஷேகம் செய்வார்கள். அதை பிரசாதமாக கொடுப்பார்கள்.

சரி… விசேஷ நாட்களில் வீட்டில் நிறைய பழங்கள் மீந்துவிட்டால் எப்படி சுவையான பஞ்சாமிர்தம் செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

ஆப்பிள் – 1
ஆரஞ்சு – 1
விதையில்லாத பேரீச்சை – 50 கிராம்
பச்சை திராட்சை – 50கிராம்
பன்னீர் (கருப்பு) திராட்சை – 50 கிராம்
மலை வாழைப்பழம் அல்லது ரஸ்தாளி – 3
சாத்துக்குடி – 1
மாம்பழம் -1
மாதுளை – 1
கட்டிக் கற்கண்டு – 50 கிராம்
தேன் – 25 கிராம்
நெய் – 1 மேசைக்கரண்டி
சிறிய தேங்காய் – 1 (துருவியது)

செய்முறை

முதலில் பழங்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஆரஞ்சு, சாத்துக்குடியைத் தோலுரித்து, விதை நீக்கி, சுளைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மற்ற பழங்களை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இதன் பின்னர், கற்கண்டை பொடித்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும்.

எல்லா பழங்களையும் கலந்து, தேன், கற்கண்டு, துருவிய தேங்காய், நெய் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்தார் நைவேத்தியத்திற்கு தேங்காய் பழ பஞ்சாமிர்தம் ரெடியாகிவிடும்.