என்ன தேங்காய் ஓட்டில் டீ-யா..? – சர்க்கரை நோயாளிகளே கவனியுங்கள்

0
204

என்ன தூக்கி எரியும் தேங்காய் ஓட்டில் டீ போட்டு குடிப்பதா..? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். தேங்காய் ஒட்டை பயன்படுத்தி தயாராகும் உணவுப்பொருள் உடலுக்கு நன்மைகளை ஏற்படுத்துகிறது என்பதை அறிவியலும் நிரூபித்துள்ளது.

தேங்காய் ஓட்டில் ஒரு குச்சியை சொருகி கரண்டியாக பயன்படுத்தி வந்தனர் நம் முன்னோர்கள். இன்னும் ஒருசில தேங்காய் ஓட்டின் கரண்டியையே பயன்படுத்துகின்றனர். அப்படி சமையலில் தேங்காய் ஓட்டை பயன்படுத்துவதால் நன்மைகள் பல ஏற்படுவதாகவே கூறப்படுகிறது. தேங்காய் ஓட்டின் இரண்டு சிறிய துண்டுகளை எடுத்து மிதமான சூட்டில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

அல்லது நாம் குடிக்கும் டீ-யில் தேங்காய் ஓட்டை பயன்படுத்தி கொள்ளலாம். எப்படி என்று கேட்கிறீர்களா..? டீ தயாரிக்கும்போது தேங்காய் ஓட்டின் இரண்டு துண்டுகளை, டீத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர், அதனுடன் பால் சேர்த்து மீண்டும் கொதிக்க விட வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி சர்க்கரை சேர்த்தும் குடிக்கலாம். காபி பிரியர்கள் அதனுடன் சேர்த்தும் தேங்காய் ஓட்டை கொதிக்க விட்டு குடிக்கலாம்.

இப்படி தேங்காய் ஓடு கலந்த டீ குடிக்கும் போது சர்க்கரை நோயாளிகளின் கால் விரல்கள் கருத்தும், அதிக வலியுடனும் உணர்வில்லாமல் இருப்பதை மாற்றுகிறது. தேங்காய் டீயை குடித்துவர கால் விரல் நுணியில் உள்ள இரத்தக் குழாயின் கடைசி நுனி வரையில் இரத்தம் பாயத் தொடங்குகிறது. இதனால் கால் விரல்கள் கருத்து இருப்பதுமாறி, உடலின் இயல்பான நிறத்திற்கு மாறுகிறது.
மேலும், உடலில் இரத்தம் தூய்மை அடைகிறது. உடல் நீரில் உள்ள தேவையற்ற கழிவுகள் மெல்ல மெல்ல நீக்கப்படுகிறது. குழந்தைகள் அதிகம் விளையாடி விட்டு வரும்போது, அவர்களுக்கு ஏற்படும் விரல் வலியையும் தேங்காய் ஓடு டீ நீக்குகிறது.