Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆர்.கே. நகருக்கு டாடா கட்டிய டி.டி.வி. தினகரன்!

டி.டி.வி. தினகரன் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் பிரிவுச் செயலாளர் மாணிக்கராஜா தெரிவித்திருக்கின்றார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதியான கடலூர் சாலையில் ஒன்றிய செயலாளர் விஜயபாஸ்கரன் ஏற்பாட்டில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக டி.டி.வி தினகரன் 57வது பிறந்தநாள் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 500 நபர்களுக்கு பிரஷர் குக்கர் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அந்த கட்சியின் தேர்தல் பிரிவுச் செயலாளரும், கட்சியின் தென் மண்டல பொறுப்பாளருமான மாணிக்கராஜா வருகிற சட்டசபை தேர்தலில் டி.டி.வி தினகரன் யாரை வேட்பாளராக அறிவித்தாலும், கோவில்பட்டி சட்டசபைத் தொகுதியில் நாம் கட்சி நிச்சயமாக வெற்றி அடையும் அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம் என்று தெரிவித்திருக்கின்றார்.

கிறிஸ்மஸ் விழாவில் பங்கேற்பதற்காக நாகர்கோவில் போகும் வழியிலேயே கோவில்பட்டியில் கொடுக்கப்பட்ட மிகப்பிரம்மாண்டமான வரவேற்பையும், மக்கள் எழுச்சியையும் பார்த்துவிட்டு டி.டி.வி தினகரன் என்னிடம் எந்த தொகுதியில் நிற்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன் கோவிலிலேயே நின்று விடலாம் என இப்போது நினைக்கின்றேன். என தெரிவித்தார். ஒரு முதலமைச்சர் வேட்பாளர் கோவில்பட்டியில் போட்டி இட்டு வெற்றி பெறும் சமயத்தில், கோவில்பட்டி தொகுதியானது சிங்கப்பூரை போல மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகவே தாங்கள் இங்கே தான் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். எனவே டி.டி.வி தினகரன் இங்கே நிற்பது நிச்சயம் என்று தெரிவித்தார்.

ஆண்டிப்பட்டி, மன்னார்குடி, ஆகிய சட்டசபை தொகுதிகளில் டி.டி.வி தினகரன் போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டு வந்தநிலையில். டி.டி.வி தினகரனின் மனதில் கோவில்பட்டி தொகுதி இடம்பெற்றிருக்கிறது என்று தெரிவிக்கின்றார்.

Exit mobile version