Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குபேரரை வடக்கு பார்த்து வைத்தால் பணப்பிரச்சனை குறையுமாம்.. தெரியுமா உங்களுக்கு?

 

குபேரரை வடக்கு பார்த்து வைத்தால் பணப்பிரச்சனை குறையுமாம்.. தெரியுமா உங்களுக்கு?

 

 

பணத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரர் மகாலட்சுமிக்கு இணையாக கருதப்படுகிறார். பணம் இருக்கும் இடத்தில் நிச்சயம் குபேரரின் வழிபாடுகள் நிறைந்திருக்கும்.பணம் பெருக குபேரரின் வழிபாட்டை பெருக்க வேண்டும்.குபேரரை வணங்குபவர்களுக்கு முற்றிலுமாக பணத்தடை என்பது இருக்க முடியாது.

உங்களுக்கு பணப்பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தால் குபேர எந்திரத்தை ஐம்பொன் அல்லது செப்பு தகடுகளால் ஆன புகைப்படங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். செல்வத்தின் அதிபதியான குபேரரை திருப்திப்படுத்துவதற்காக இந்த பொருள் வீடுகள் மற்றும் பணியிடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

 

குபேர யந்திரத்தை முதலில் பூஜையறையில் தான் வைக்க வேண்டும். பின்னர் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். மீண்டும் பூஜையின்போது குபேர யந்திரத்தை வெளியே எடுத்து பூஜையறையில் வைக்க வேண்டும். பூஜைகள் முடிந்ததும் மறுநாள் மீண்டும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து கொள்ளுங்கள். பூஜை செய்யும் பொழுது யந்திரத்திற்கு மலர்களாலும், மஞ்சள் கலந்த அரிசியினாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். கற்பூர காட்ட வேண்டும். காட்டும்போது குபேர யந்திரத்திற்கும் சேர்த்து கற்பூரம் காண்பித்து வழிபட வேண்டும்.

 

சிறப்பு வாய்ந்த குபேர எந்திரத்தை வீட்டில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களில் வைத்து வழிபடுவதால் கடன்கள் தீரும் என்பது ஐதீகம். படிப்படியாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வருமானம் பெருகி குபேரனைப் போல் செல்வந்தர்களாக ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version