Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Kanavu Palangal in Tamil : கனவில் இவை அனைத்தும் வந்தால் என்ன பலன் தெரியுமா? 

Kanavu Palangal in Tamil : கனவில் இவை அனைத்தும் வந்தால் என்ன பலன் தெரியுமா?

வெண்ணெய்:

வெண்ணெய் உண்பதுபோல் கனவு கண்டால் காதல், பாசம், அன்பு பரிமாற்றம் நிகழும். வெற்றியும் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சாம்பிராணி புகை:

வீட்டில் சாம்பிராணி புகை போடுவது போல கனவு கண்டால், குடும்ப கஷ்டங்கள் விலகும். தொழிலில் இருந்த கடன்களை அகற்ற நல்ல வழிகள் கிடைக்கும்.

விபத்து:

விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால், கெடுதல் வரப்போவதன் அறிகுறி. ஆகவே, கவனமாக இருந்தால், கெடுதலில் இருந்து தப்பிக்கலாம்.

வேலை:

வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதுபோல் கனவு கண்டால், அவ்வாறான செயல் நிகழவும் கூடும். வருங்கால உயர்வுகளும் பாதிக்கக்கூடும்.

வாகனம்:

வாகனத்தை தள்ளி கொண்டு போவது போல கனவு கண்டால், பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் அவதிப்பட்டு கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவி செய்ய முன் வருவார்கள் என்று பொருள்.

வங்கி:

வங்கியில் பணம் எடுப்பதுபோல் கண்டால், சுபச் செலவுகள் ஏற்படுத்தும் இத்துடன் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். அதனால் செலவுகளை கட்டுக்குள் கொண்டு வருவது நல்லது.

வினோதமான உருவம்:

மனதிற்கு பயமூட்டும், வினோதமான உருவம் உங்கள் கனவிலே வந்தால் இதுநாள் வரை இருந்து வந்த சிக்கலும், சங்கடங்களும், கவலைகளும் நீங்கி நீங்கள் நிம்மதி அடைவீர்கள் என்று பொருள்.

Exit mobile version