Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன நன்மைன்னு தெரியுமா?

#image_title

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன நன்மைன்னு தெரியுமா?

நாம் தூங்கும்போது கனவுகள் வருவது இயல்புதான். ஆனால், சில கனவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். சில கனவுகள் பயங்கரமாக இருக்கும்.

அப்படி உங்கள் கனவில் கோயில் தெய்வங்கள் வந்தால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம் –

மகாவிஷ்ணு கடவுள் உங்கள் கனவில் வந்தால், செல்வ செழிப்பு ஏற்படும்.மகாவிஷ்ணு கருடன் மீது அமர்ந்து வந்தால், நம் தொடுத்த வழக்குகள் சாதகமாக முடியும்.

 

இயேசு கடவுள் உங்கள் கனவில் வந்தால், மனதில் அமைதி ஏற்படும்.

இயேசுவை சிலுவையில் அறைவது போல கனவு வந்தால் துன்பம் ஏற்படப்போவதாக அர்த்தம்.

காளி கடவுள் கனவில் வந்தால், குடும்பத்தில் சண்டை ஏற்படும்.

ஐய்யப்பன் கடவுள் கனவில் வந்தால் நன்மை பிறக்கும்.

நீங்கள் உங்கள் கனவில் கடவுளுக்கு மாலை போடுவதுபோல் கனவு கண்டால், நல்ல வளர்ச்சியை அடைவீர்கள்.

உங்கள் கனவில் கோவில் கோபுரம் வந்தால், வாழ்க்கையில் முன்னேற்றம் அடையபோகிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கனவில் கோவிலில் பிரசாதத்தைப் வாங்குவது போல் கனவு கண்டால் நமக்கு நெருங்கியவர்களால் பிரச்சினை வரப்போவதாக அர்த்தம்.

உங்கள் கனவில் கோவில் குளம் வந்தால் உங்களுக்கு வெற்றி தேடி வரப்போகிறது என்று அர்த்தம்.

உங்களிடம் கடவுள் பேசுவது போல் கனவு வந்தால் நல்லது நடக்கப்போகிறது என்று அர்த்தம்.

உங்கள் கனவில் கோவிலில் இருப்பது போல் கனவு கண்டால், நினைத்த விஷயங்கள் விரைவில் நடைபெற உள்ளதாக அர்த்தம்.

கோவிலுக்கு செல்ல முடியாமல் கூட்டத்தில் சிக்கிக்கொள்வது போல் கனவு கண்டால், சில பிரச்சினைகளில் நீங்கள் சிக்கியிருப்பதாக அர்த்தம்.

உங்கள் கனவில் சிவலிங்கம் வந்தால், நீங்கள் தியானம் செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

விநாயகர் கடவுள் கனவில் வந்தால், எல்லா பிரச்சனைகளும் விரைவில் தீரப்போவதாக அர்த்தம்.

யானை துரத்துவது போல கனவு வந்தால், விநாயகருக்கு நேர்த்தி கடன் செலுத்த வேண்டும்.

Exit mobile version