உணவில் சேர்க்கப்படும் கடலை எண்ணெயின் மகத்துவம் தெரியுமா? அட இதில் எவ்வளவு பயன்கள் இருக்கா!!?
நம்மில் பலர் வேர்க்கடலையை விரும்பி உண்டு வருகிறோம்.இதன் சுவை மற்றும் வாசனை அடக்கமாக இருக்கும்.மண்ணிற்கு கீழ் விளையும் இந்த வேர்க்கடலையில் வைட்டமின்கள் ஈ,பி1, பி3 மற்றும் பி9 மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.இந்த வேர்க்கடலையில் பாதம் பருப்புக்கு நிகரான சத்துக்கள் அடங்கி இருப்பதால் இவை ஏழைகளின் பாதம் என்று சொல்லப்படுகிறது.
இந்த வேர்க்கடலை முக்கியமாக எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது.அதுமட்டும் இன்றி மிட்டாய்,லட்டு உள்ளிட்ட இனிப்பு பண்டங்களும் இதில் தயாரிக்கப்படுகிறது.கடலையை வைத்து தயாரிக்கப்படும் உணவுகளை எடுத்து வருவதன் மூலம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
கடலை எண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்:-
கடலை எண்ணையில் உள்ள “ரெசவராடால்” எனும் நோய் எதிர்ப்பு பொருள் உடலில் இதயம் தொடர்பான பாதிப்பை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
இதில் அதிகளவு மாங்கனீசு மற்றும் கால்சியம் சத்து நிறைந்து இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் முடி கொட்டும் பிரச்சனை இருப்பவர்கள் கடலை எண்ணெயை உணவில் சேர்க்கத் தொடங்குங்கள்.இதில் அதிகளவு வைட்டமின் இ சத்து இருப்பதால் முடி கொட்டல் பாதிப்பு சரியாகும்.
நீரிழிவு நோய் இருப்பவர்கள் கடலை எண்ணெய் உபயோகிக்க பழகிக் கொள்ளுங்கள்.இதனால் அந்த பாதிப்பு விரைவில் சரியாகும்.
ஞாபக மறதி,நரம்பு சம்மந்தமான பாதிப்பு இருப்பவர்கள் உணவில் கடலை எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் அந்த பாதிப்புகள் விரைவில் சரியாகும்.அதேபோல் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை இந்த கடலை எண்ணெய் வழங்குகிறது.
சரும பாதிப்பு,இரத்த சோகை பாதிப்பு உள்ளிட்டவற்றிக்கு கடலை எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும்.