பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கி வருகின்றது. தற்சமயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மற்றும் கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க கடைசி தேதி அம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் அவர்கள் படிப்பு செலவிற்காக உதவி தொகை பெற்று வருகின்றனர். மேலும் இதனால் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து உதவி தொகை வெற்றிகரமாக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.
இதிலும் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வரும் போது எந்த ஒரு நிபந்தனையும் இன்றி உதவி தொகை வழங்கப்படுகின்றது. பிற படிப்புகள் அதாவது தொழிற்படிப்பு, முதுகலை படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. மேலும் இந்த வருடம் புதிதாக அப்ளை செய்யும் மாணவர்களின் விண்ணப்ப வடிவத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 28 என்று அறிவித்துள்ளது. மேலும் https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் மாணவர்கள் இப்படிவத்தை சமர்ப்பிக்க தேவையில்லை. அவர்கள் நடப்பாண்டில் கல்லூரிகளில் படிக்கிறார்களா? என்பதை அக்கல்லூரி நிர்வாகத்தில் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு, மாணவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.